Today Rasi Palan, 17th January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 17th January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 17, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
சற்று தன்மையாக கருத்து வெளிப்படுத்தினாலும் மற்றவர்கள் அதை கேட்பார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நிதானமாக யோசியுங்கள், செயல்படுங்கள். பணியிடத்தில் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்வீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்திவிடலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். உங்களுக்கு கொடுக்கப்படும் அட்வைஸ் என்ன தெரியுமா? நில்லுங்கள், பின்னாடி திரும்பிப் பாருங்கள். பின் தொடருவது யார் என்பதை புரிந்து கொண்டு நடை போடுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
யாரையும் குறைவாக எடைபோட வேண்டாம். விஸ்வரூபம் என்பது எல்லோருக்கும் பொதுவான சொத்து என்பதை மறக்க வேண்டாம். திருமணம் குறித்த பேச்சு ஆரம்பிக்கும் அன்பர்களே.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பிள்ளைகள் உடல்நலத்தில் அக்கறை தேவை. பணவரவு தொடர்ந்து அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். நல்லது எது, கெட்டது எது என்பதை பகுப்பாய்வு செய்து தெளிவாக முடிவு எடுப்பீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட முடியாது. நண்பர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு கைக்கொடுக்கும். உங்களின் தனிப்பட்ட முயற்சி உங்களை அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற வைக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
குடும்ப உறுப்பினர்கள் உங்களது செயல்பாட்டை முடிவு செய்ய அனுமதிக்காதீர்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நன்று. பெர்சனல் வாழ்க்கையில் சில இடர்பாடுகள் ஏற்படலாம். அதை உங்கள் பணியிடத்தில் நுழைக்காமல் இருப்பது உங்கள் வேலைக்கு நல்லது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
பெற்றோருக்கும் உங்களுக்கும் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கும். குட்டி மீது ஆடு பகை கொள்ளுமா? வெளிநாட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கைக்கூடும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
இந்த வாரம் உங்களுக்கு சற்று சீரியஸாக இருக்கும். இதனால் உங்களது சில திட்டங்கள் மாறும் அல்லது தள்ளிப் போகும். இருந்தாலும் சந்திரன் உங்கள் மீதான அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் ராசியில் சந்திரன் கட்டுப்பாட்டில் உள்ளார். எனினும், உங்கள் பணிகளை மற்றவர் செய்யவோ, உங்கள் மீது மற்றவர் ஆதிக்கம் செலுத்தவோ அனுமதிக்காதீர்கள். பழைய பகை தீரும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாள். இன்று நிதிநிலையில் நம்ப முடியாத அளவு பலன் இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
இன்றைய நாள் அமைதியாக இருக்க பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். அதிக தண்ணீர் குடிப்பதும் எண்ணெய் பதார்த்தங்கள் தவிர்ப்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டால் தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வாழ்வில் உங்கள் பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சிறிது பதட்டத்தை ஏற்படுத்தும். குழப்பம் ஏற்படாதபடி தெளிவான இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க பரிகாரம் மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.