Advertisment

Rasi Palan 17th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 17th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 17th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan 17th July: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 17th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 17th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 17, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நீங்கள் நிச்சயம் வெற்றியாளர் தான். உங்களைச் சுற்றி உள்ள நெகட்டிவ் வைப்களை தூக்கி எறிந்து, மிக வலிமையான நிலையை எட்டுவீர்கள். உங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வைத்திருப்பதில் முனைப்புடன் செயல்படுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மோசமான நிதிநிலைமை உங்களை அடுத்த வருடம் வரை வெகுவாக பாதிக்கும். ஆனால், இந்த வாரத்தை பொறுத்தவரை, அதனை ஓரளவுக்கு முறியடிப்பீர்கள். உங்களது சிறந்த முயற்சியை வெளிப்படுத்தி, அதனதன் மூலம் வெற்றிக் கனியை பறிப்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

வாழ்வில் நீங்க சமீப காலங்களாக சந்தித்துக் கொண்டிருக்கும் ஏற்றமும், இறக்கமும் உங்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். தோல்விகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வது உங்களுக்கு சிறப்பாகும். உங்களுக்கு எது கொடுக்கப்படவில்லையோ அதை நினைத்து வருந்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பிஸியான நட்சத்திரங்கள், உங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஆனால், காலம் கடந்து நீங்கள் செய்யும் பணிகள் உங்களுக்கு ஆதரவான முடிவைத் தரும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்களது நாளைய தோல்வி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பொறுப்பான இடத்தில் இருப்பீர்கள். அப்படியெனில், நீங்கள் எல்லா இடங்களிலும் அமைதியை நிலவ வைக்க வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சுற்றி இருப்பவர்கள் வெவ்வேறு களத்தில் இருந்து வந்திருப்பவர்கள் என்பதை உணர்ந்து கொண்டால், உங்களது வெற்றிக்கான பாதையை கண்டறிந்து விடுவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நீங்கள் சரியான திசையில் தான் சென்றுக் கொண்டிருக்கிறீகள் என்று நீங்களே நம்பக் கூடாது. நீங்கள் விரும்பிய நபர் உங்களுக்கு கிடைக்கவில்லை எனில், அதற்காக வருத்தப்பட வேண்டாம். அவரைவிட சிறந்த நபர் உங்களுக்கு கிடைக்கப் போகிறார். தெரியுமா?

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

ஒரு தமிழ் பாடலில் வரும் வரிகளைப் போன்று, 'இதுவும் கடந்து போகும்' என்று சொல்ல வேண்டிய தருணம் இது. உங்களது வலிகளை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையே என வருந்த வேண்டாம். நீங்களே தான் உங்களுக்கு ஆறுதல். எதிர்கால திட்டமிடல் உங்களின் ப;பலமாக இருக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நண்பர்களை தேர்வு செய்வதில் இப்போது தான் உங்களுக்குள் ஒரு தெரிவு ஏற்படும். யார் உங்களை உண்மையில் நேசிக்கிறார்கள் என்பதையும், ஆறுதலாக இருப்பது போல் நடிக்கிறார்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை தெளிவாக கன்வே செய்ய முயற்சி செய்யுங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உண்மை என்னவெனில், இப்போது உங்களிடம் அபாரமான யோசனைகள் இருக்கின்றன. நீங்களும் கட்டுப்பாட்டோடு இருக்கிறீர்கள். மற்றவர்களின் அலட்சிய வார்த்தைகளுக்கும், கசப்பான வார்த்தைகளுக்கும் இனி நீங்கள் மதிப்பு கொடுக்க தேவையில்லை. இதனால், உண்மைகளை வெளிக்கொணர்ந்து தருணங்களை உங்களுக்கானதாக மாற்றுவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களது யோசனைகள் பிடிக்காமல், உங்கள் நண்பர்கள் கூட உங்களை புறக்கணிக்கலாம். உங்களது சார்பில் இருந்து தெளிவுரையைக் கொடுக்க, இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் கூட ஆகலாம். மேகமாக மறைந்து போக மாட்டீர்கள். வானமாக நிலைத்து நிற்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

புதிய நண்பர்களை உங்கள் வட்டாரத்தில் சேர்ப்பீர்கள். உங்களது பெர்சனல் விஷயங்களைக் கூட அவர்களிடம் ஷேர் செய்யும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். உங்கள் அறிவுக்குட்பட்டே அனைத்தும் நடக்கிறது. ஆகையால், நன்மை, தீமைக்கு நீங்களே பொறுப்பு.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்களின் கோபதாப மனநிலையை சற்று ஒதுக்கி வையுங்கள். அதிரடியான நடவடிக்கைகள் உங்களுக்கு நிச்சயம் கைக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இப்போது உங்களுக்கு அமைதி என்பது அவசியமாகிறது. உங்களின் தரத்தை அது நிச்சயம் மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment