மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
வெற்றிகரமான நாள். வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு பல நாள் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த பாடங்கள் எளிதில் உள்வாங்கப்படும். குடும்ப உறவில் சிக்கல் நீங்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
மன அழுத்தம் குறையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மருத்துவம் தொடர்பான செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு. குழந்தைகள் பரமாரிப்பில் கவனம் தேவை. மகிழ்ச்சியும், சிக்கலும் கலந்த நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
முன்னேற்றத்தை நோக்கி நகரும் மற்றொரு படிக்கல் இந்த நாள். குளிர் நீரில் குளிப்பதை தவிர்த்து, சுடு நீரில் குளித்தால் நல்லது. கடன்கள் வசூலாகும். மனைவியின் ஆதரவு கிடைக்கும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உடல் பிணி குணமாகும். ஆலை உலுக்கிப் போடும் அளவிற்கு காய்ச்சல் அடித்தாலும், பயப்படும்படி ஒன்றுமிருக்காது. காலை விநாயகரை வணங்கிவிட்டு பணிகளை துவக்கினால் பலன் தரும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
ஏழு கடலை தாண்டிய உற்சாகம் உண்டாகும். கடினமான பணிகளையும் ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து செல்வீர்கள். காதல் கைக்கூடும். திருமண உறவு தித்திக்கும். திருப்தியான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உடல்நலனில் அக்கறை வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள ஏதாவதொரு கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. உணவில் கட்டுப்பாடு தேவை. கவனமாக இருக்க வேண்டிய நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
விலாவாரியாக எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருக்காமல், உங்கள் பணியை மட்டும் கவனியுங்கள். அரசுப் பணிகளுக்கு தயார் ஆகுபவர்கள், இன்று மறக்காமல் சிறிது நேரமாவது படித்தால் நல்லது. வெற்றி வந்து சேரும் நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நண்பர்களின் ஆலோசனைக் கேட்டு நடக்க வேண்டும். திட்டம் போட்டு செலவுகளை சமாளியுங்கள். ஆடம்பரத்தை சற்று ஒதுக்கி வையுங்கள். எண்ணெய் சார்ந்த பலகாரங்களை இன்று ஒதுக்கினால் நல்லது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பொய் சொல்வதை தவிர்க்கவும். கிரகங்கள் உங்களுக்கு எதிராக இருப்பதால், சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. வாயுப் பிரச்சனை அதிகமாகும். அமைதியை கடைபிடியுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வெளிநாடு வாய்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது. காதலில் நல்ல பதிலை எதிர்பார்க்கலாம். வெற்றி எனும் தேவதை இன்று உங்களுடன் இருக்க விரும்புகிறாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
செலவு கையைச் சுடும். உங்கள் திறமையான நிர்வாகத்தால் அதனை சமாளிப்பீர்கள். முப்பாட்டன் முருகனை மனதில் நினைத்து காரியங்களில் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பழைய உடையை இன்று உடுத்த வேண்டாம். திருமணம் தொடர்பான தேடுதல் படலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உடல்நலம் மேலோங்கும். சிக்கல்கள் குறையும்.