Rasi Palan 17th October 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 17th October 2020 rasi palan today - இன்றைய ராசிபலன்

By: October 17, 2020, 7:15:27 AM

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 17th October 2020: இன்றைய ராசி பலன், அக்டோபர் 17, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சூரியன் இப்போது உங்கள் வாழ்க்கையில் விலையுயர்ந்த எல்லாவற்றையும் முன்னிலைப்படுத்துகிறது. வெளிப்படையாக பகட்டாக சொல்லக்கூடாது. நீங்கள் செலவழிப்பதை விட சேமிப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள் உங்கள் பணத்தை எடுப்பது என்பது கல்லில் இருந்து இரத்தத்தை வெளியே எடுப்பது போலாகும். உங்களுக்கு உலகம் பொதுவாக மிகவும் நட்பான இடம் என்ற ஒரு உணர்வு இருக்கிறது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

அது நடக்கிறபோது அது உங்களின் பாரம்பரிய முயற்சிகளுக்கான நேரமாக இருக்கும். ஏனென்றால், பழமையான எல்லா பொருட்களின் அடையாளமாக உள்ள சனி அவற்றின் பின்னணியில் இருக்கும். இந்த நேரத்தில் கிரகங்களின் தாக்கங்கள் குறைவாக உள்ளது. எனவே, முட்டாள்தனமாக இருப்பதை நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்களுடைய கூட்டாளிகள் அல்லது நெருங்கிய நண்பர்கள் சரியான கவனம் செலுத்துகிற அரிதான காலங்களில் இதுவும் ஒன்று. நீங்கள் ஒரு சிறிய அளவிலான உணர்ச்சிவசப்பட்ட அச்சுறுத்தலைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் அல்லது அப்படி ஒரு சிறிய காட்சியை உருவாக்க வேண்டியிருக்கும். ஆனால், ஒரு வழியிலோ அல்லது மறுவழியிலோ நீங்கள் இப்போது கவனிக்கப்பட வேண்டும் என்பதை மற்றவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

கடகம் (ஜூன் 22  – ஜூலை  23)

உங்களுடைய காரியங்கள் பொதுவாக மிகவும் மந்தமாகத் தெரிகின்றன. இதற்கு நீங்கள் பிஸியாக இல்லை என்று அர்த்தமல்ல. சில நேரங்களில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருகிறது. நீங்கள் ஒரு சூதாட்ட மனநிலையில் இருந்தால், நீங்கள் ஒரு உணர்வுப்பூர்வமான ஆபத்தை சந்திக்கலாம். ஆனால், வேறொருவரின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்களுக்கு கருத்து வேறுபாட்டிற்கான ஒரு சிறிய வாய்ப்பு உள்பட அமைதியான சமூக செல்வாக்கு இருக்கும். ஆனால், வேறு எந்த அறிகுறிகளும் இல்லை. இது பொறுப்பற்றதாக இருக்க சிறந்த நேரம் என்றாலும், நடைமுறை வேலைகளுக்கு இது சிறந்த நாள் அல்ல. பின்விளைவுகளுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24  – செப்டம்பர் 23)

பணத்துடன் தொடர்புடைய உங்கள் ராசி கட்டத்தில் சில பகுதிகளில் உள்ள சிறப்பு அறிகுறிகள் நிதி அபாயங்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை அளிக்கிறது. மனநிறைவைத் தவிர வேறு எந்த வருமானத்தையும் நீங்கள் பெறவில்லை என்றால் நீங்கள் அப்படியே தொடரலாம். இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரொக்கப் பரிசுகளை எதிர்பார்க்க வேண்டாம்!

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்கள் பயணத் திட்டங்களை முன்னதாகவே செல்வதற்கு ஒரு மோசமான விஷயம் இருக்கிறது. இருப்பினும், நீங்கள் ஒரு பயணம் செய்வீர்கள் என்பது தெளிவாக இல்லை. அது உங்களுக்கான ஆன்மீக சாகச பயணமாக இருக்கலாம். மேலும், வெளிநாடுகளில் அல்லது தொலைவில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் இப்போது தொடர்பு கொள்ளலாம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்களுக்கு வணிக வாய்ப்புகள் அடர்த்தியாகவும் அதிக அளவிலும் வருகின்றன. ஆனால், அதைக் கண்டறிவது கடினம். அதை புரிந்து கொள்ளுங்கள். சில கற்பனைகளை அப்படியே விட்டுவிடுவதற்கு இது ஒரு சிறந்த நாளாக இருக்கலாம். கனவுகள் பொக்கிஷமாக இருக்கும், ஆனால் செயல்படுத்தப்படமாட்டாது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20)

உங்களுக்கு சூரியன் ஒரு புதிய கால கட்டத்தையும் சாத்தியமான சாதனைகளையும் திறந்து வைக்கிறது. எனவே, இது எல்லாம் சுலபமாக இருக்கும் என்று அர்த்தமில்லை. ஆனால், வெளிப்படையாக சின்ன நிகழ்வுகளுக்கு கூட ஒரு முக்கியத்துவம் இருக்கும். அது உடனடியாக தெளிவாக இருக்காது. நீங்கள் ஒரு அளவுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்கள் வாழ்க்கையில் சிறப்பாக நடக்கும் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு மோசமான சூழ்நிலையிலும் நம்பிக்கை தரும் விஷயங்கள் இருக்கும். பொறுமையை வளர்த்துக் கொள்ளுங்கள், இப்போது இரக்கமுள்ள, அக்கறையுள்ள, கிட்டத்தட்ட நல்ல மனிதராக இருக்க வேண்டிய நேரம் இது என்பதை உணருங்கள். நீங்கள் எவ்வளவு அன்பை வெளிப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் திரும்ப எதிர்பார்க்கலாம். உண்மையில் இது எளிதானது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நீங்கள் நல்லொழுக்கச் செயல்களில் சரியாக இணைந்திருக்கலாம். ஒரு தந்திரமான சூழ்நிலையிலிருந்து மற்றவர்களுக்கு உதவ உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யலாம். ஓய்வெடுக்கும்போது, தார்மீகக் குறைவுடன் உங்கள் மகிழ்ச்சியை எடுத்துக்கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒரு நல்ல கதையை விரும்புவதால் நீங்கள் யாரிடமாவது கதை விட்டுக்கொண்டிருக்கலாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நீங்கள் பொதுவாக ஒரு இறுக்கமான இடத்தில் இருக்கும்போது, ஏதேனும் ஒன்று வந்து அந்த நாளைக் காக்கும் நம்புகிறீர்கள். இது உண்மையில் உங்களுடைய மிகவும் மகிழ்ச்சிகரமான குணாதிசயங்களில் ஒன்றாகும். இதை நம்புங்கள் அல்லது நம்பாமல் விடுங்கள். இது போன்ற சமயங்களில் உங்கள் நம்பிக்கை சில ஆவலான பாணியில் செல்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Horoscope News by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 17th october 2020 rasi palan today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X