Advertisment

Rasi Palan 17th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 17th September Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 17th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 17th September 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 17th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 17th September 2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 17, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் கனவுகளையும், கற்பனைகளையும் நிறைவேற்ற சரியான காலக்கட்டம் இது. நிலையான வெற்றி கிடைக்காமல் தடுமாறிய நீங்கள், உங்கள் இலக்குகளை அடைவீர்கள். அதே சமயம், இதர சில நோக்கங்கள் நிறைவேறாமல் போகலாம். அது என்னவென்று உங்களுக்கு மட்டுமே தெரியும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சரியான திசையில் உங்களுக்கான பாதைகளை அமைத்துச் செல்லும் ரிஷப ராசிக்காரர்களே, நண்பர்களின் ஆலோசனைகளை அவ்வப்போது கேட்டு நடந்து கொள்வது பயன் தரும். திருமண யோகம் இருக்கிறது. கவலை வேண்டாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நல்ல செய்தியுடன் இன்றைய தினத்தை தொடங்குவோம். உங்கள் நட்சத்திரங்கள் உங்களுக்கான ஆளுமையை உச்சபட்ச நிலையில் அளிக்கிறது. தவறுகளை திருத்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் பயணிப்பீர்கள். விவாதங்களை தவிர்க்கவும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

சேமிப்பை தொடங்குவீர்கள். உங்களது மாற்றம் குடும்பத்தினரிடையே ஆச்சர்யத்தையும் உள்ளூர மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். சாதனைகளை அடுத்தடுத்து உங்கள் வசம் வர காத்திருக்கிறது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சில சமயம் வாழ்க்கை நாம் எதிர்பார்ப்பது போல் அமையாது. அதன் போக்கில் சென்றே அதனை வாழ வேண்டும். எவ்வளவு திமிறினாலும் தோல்வி தான் மிஞ்சும். இந்த உண்மையை புரிந்து கொண்டு செயல்படுங்கள். தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கேள்விக் கேட்ற்கும் திறன் உங்களிடம் அதிகரித்திருப்பதை நீங்களே உணரும் காலம் இது. அதனால், நம்மையா, தீமையா என்பதே சஸ்பென்ஸ். அனைவரையும் நம்ப வேண்டும் என்று அவசியமில்லை. அதற்காக புறக்கணிப்பை எல்லாவற்றிலும் செயல்படுத்தாதீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கடந்த சில நாட்களாக உங்களுக்கு வர வேண்டிய அதிர்ஷ்டம் தடைப்பட்டு போவது உணருகிறீர்களா?. இனி அந்த தடைக்கு நீங்கள் விடை கொடுக்கலாம். வெளிநாடு செல்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

எளிதில் யாரையும் இன்று நம்ப வேண்டாம். உங்கள் சுய முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நண்பர்களை கூட சற்று தள்ளியே வையுங்கள். பிரச்சனைகளை கண்டு அஞ்ச வேண்டாம். எதிர்த்து நில்லுங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எதிர்காற்றில் முடிந்த அளவு பயணிக்க வேண்டாம். உடல்நலத்தில் சற்று அக்கறை தேவை.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களின் நம்பிக்கை சிதையாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. உங்களால் முடியும் என நீங்கள் நம்பினால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. கிரக நிலைகள் சாதகமாகவே உள்ளன. கடவுள் வழிபாட்டுடன் இன்றைய தினத்தை தொடங்குங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இதற்கு முன் ஏற்பட்ட மனவலி மீண்டும் உங்களை காயப்படுத்தும். அது இரத்தம் இல்லை… மருதாணி சிவப்பு எண்ணிக் கொள்ளுங்கள். காயங்களில் இருந்து நீங்களாகவே சிறிது விடுபடலாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ஆகாயத்தில் மிதக்காமல், கனவுகளில் திளைக்காமல் பொறுப்பை திறம்படச் செய்ய வேண்டியது அவசியம். உங்களுக்கான நாள் இன்று இல்லை என்றாலும், வரும் நாட்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment