மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் பொழுது, அதனை கெட்டியாக பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். மகிழ்ச்சியான மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும். உங்களை நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
சமீப காலங்களில் உங்களுக்கு இறக்கங்கள் இருந்தாலும், இன்று முன்னேற்றத்தை நோக்கி பயணம் செய்வீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேறத் துவங்கும். பாஸிட்டிவான மன நிலையில் இருப்பீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
சில முக்கிய பலன்களுக்காக வேறு சில நல்ல நேரங்களை இழக்க நேரிடும். முக்கியமான முடிவுகளில் நீங்கள் கன்வின்ஸ் ஆகாத வரை, அதை வெளிப்படுத்தாதீர்கள். திட்டங்களை நேர்மையாக வகுத்துக் கொள்ளுங்கள்,
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்களுக்கு பிடிக்காத எந்தவொரு விஷயங்களையும் நீங்கள் செய்யுமாறு யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி கட்டாயப்படுத்தினாலும் அதற்கு நீங்கள் உடன்பட மாட்டீர்கள். இருப்பினும், சில தருணங்களில் மற்றவர்கள் ஆலோசனை மற்றவர்களின் ஆலோசனைகளை உள்வாங்கிக் கொள்வது நன்று.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உங்கள் இலக்குகளை நீங்களே மேலும் முன்னோக்கி மாற்றி அமைப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை பணியிடத்தில் கொண்டு வராதீர்கள். உங்களுக்காக உதவி செய்ய, உங்களைச் சுற்றி மற்ற நண்பர்களும் இருப்பார்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மற்றவர்கள் முன்பு உங்கள் வெற்றியை நிலை நாட்டுவீர்கள். எதிரி யார் என்பதை விட, செய்ய வேண்டிய செயல் என்ன என்பதில் கவனமாக இருப்பீர்கள். சமூகம் சார்ந்தோ, அல்லது ரொமாண்டிக்காகவோ, இன்று உங்களுடைய நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்களின் அதீத திறமையை வெளிக்காட்ட வேண்டிய நேரம் இது. நீண்ட நாள் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதுவே உங்களை நிம்மதியாக வைத்திருக்கும். உடன் இருப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உங்கள் காமன் சென்ஸ் எந்தளவிற்கு சிறப்பாக வெளிப்படுகிறதோ, அந்தளவிற்கு பேரும், பெருமையும் உங்களை வந்துச் சேரும். இல்லையெனில், தவறான முடிவெடுத்து விட்டோமே என்று, இந்த வாரம் முழுவதும் புலம்பிக் கொண்டிருப்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் வழியில் பயணித்தால் வெற்றி உறுதி. உங்கள் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வையுங்கள். உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் பலம். அதுவே உங்களது வெற்றி.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுங்கள். உங்களது சில முயற்சிகள் தோல்வியில் முடியலாம். கடினமாக உழைத்தும் தோற்கும் போது தான், இந்த வாழ்க்கையே இப்படித் தான் என்ற சலிப்புத் தோன்றும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்களின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய நாள் இது. அது உங்கள் வாழ்வை மேன்மையாக்கும். தீயவை உங்கள் அருகில் கூட வராது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
குடும்பத்தை விட்டு சில காலம் பிரிந்திருக்க எண்ணுவீர்கள். ஆனால், அப்பொழுதும் அவர்களிடம் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஒற்றுமையாக சில விஷயங்கள் உங்களுக்கு இன்று நடக்கலாம்.