Today Rasi Palan, 18th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 18th November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 18, 2019
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
Advertisment
Advertisements
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
கற்பனை வானில் சிறகடித்து பறப்பீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற பிரயத்தனம் மேற்கொள்வீர்கள். உணவு விஷயங்களில் அதிக அக்கறை அவசியம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கடந்த கால அனுபவங்களில் இருந்து புதிய பாடம் கற்றுக்கொள்வீர்கள். சர்வாதிகார போக்குடன் செயல்படுவதால், மற்றவர்களின் கோபத்துக்கு ஆளாவீர். பிரியமானவர்களுடன் இருந்த பிணக்கு நீங்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
பணிசார்ந்த விவகாரங்களில் மனஅமைதி ஏற்படும். எதிர்கால வாழ்க்கைக்காக இப்போதே திட்டமிட துவங்குவீர்கள். பயணங்களால் ஆதாயம் காணும் நாள்..
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் கடைபிடிக்க வேண்டிய நாள். கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி நடந்தேறும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கனவுகளை நனவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். நிதி விவகாரங்களில் திருப்திகரமான நிலை நிலவும். நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிரியமானவர்களுடன் பொழுதை இனிமையாக கழிப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
நீண்டநாட்களாக தொடரும் விவகாரத்தில், விட்டுக்கொடுத்து செல்வதனால் மட்டுமே தீர்வு ஏற்படும் என்பதை உணர்வீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
வாகன விபத்துக்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளதால் கவனம். மதிப்புமிக்க நபர்கள் மற்றும் பொருட்களை கையாளுவதில் அதிக கவனம் அவசியம். எதிலும் விழிப்புணர்வுடன் இருங்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பணியிடம் மற்றும் நிதி விவகாரங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உங்களின் கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம். விழிப்புடன் இருந்தால் விரயங்களை தவிர்க்கலாம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வையகம் இன்று உங்களுக்குள் அடங்கும். செய்யும் தொழில்களில் வெற்றி காண்பீர்கள். புதிய முயற்சிகளை பரிசீலித்து பார்ப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.