Today Rasi Palan, 18th February 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 18th February 2020: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 18, 2020
இன்றைய நாள்
Advertisment
Advertisements
யுரேனஸ் கிரக சுற்றுவட்டபாதையில் வானியல் அறிஞர்கள் இரண்டு பெரிய நிலாக்களை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து நிலாக்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. அதாவது மாதத்திற்கு 17 முழுநிலா நாட்கள் என்று வகுத்துள்ளனர்.
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
செயல்களை மாற்றிச்செய்வதனால், வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
வாழ்க்கைப்பயணம் மேடு பள்ளங்கள் நிறைந்தது என்பதை மறந்துவிட வேண்டாம். ஓய்வு தேவைப்படும் நாள். புதுவிதமான முயற்சிகளால் மனதில் உத்வேகம் நிறைந்திருக்கும். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் நினைப்பதுபோன்று மற்றவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை மறந்துவிடுங்கள். எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அளிக்கலாம் என்பதால் கவனம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கிரகங்களின் சாதகமான பார்வையினால் நினைத்த காரியங்கள் எண்ணியவாறு ஈடேறும். உலகம் பிறந்தது எனக்காக என்ற எண்ணம் ஏற்படும். பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பீர்கள். அசதியால் அவதிப்படுவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மறதியால் அவதிப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். மனசஞ்சலம் அதிகரிக்கும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
பொதுநல விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். நிதி, தொழில் சார்ந்த விவகாரங்களில் அதிக விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வதால் மனம் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
தலைமைப்பொறுப்பு ஏற்பீர்கள். ஆதாயம் வரும் நாள். பிரியமானவர்களுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மகிழ்ச்சியான நாள். செயல்களில் முன்னேற்றம் நிலவும். நிதி, தொழில் விவகாரங்களில் திருப்தி நிலை ஏற்படும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
அதிர்ஷ்டகரமான நாள். விரயத்தை தவிர்க்க அதிக விழிப்புணர்வு காட்டுவது நல்லது. அகலக்கால் வைக்காமல் இருப்பது சாலச்சிறந்தது. மன அமைதிக்கு தியானம் மேற்கொள்வது நல்லது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மற்றவர்களின் குற்றச்சாட்டுகளை பெரிதுபடுத்தாதீர்கள். முன்னர் செய்த செயல்களுக்கு பலன் பெறுவீர்கள். கொடுத்த வார்த்தையை காப்பாற்ற அதிக பிரயத்தனம் மேற்கொள்வீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
உங்களின் வார்த்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கணவன் -மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். முயற்சி திருவினையாக்கும் என்பதை மறக்கவேண்டாம்.