Today Rasi Palan, 18th January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
Rasi Palan 18th January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 18, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
எதற்காக இந்த முயற்சி எடுக்கிறோம் என்று தெரிந்து எடுப்பது உங்களுக்கு மட்டுமல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. வேலை சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் உங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமாகிறது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
சில அற்புதமான தருணங்களை கண்டறிவீர்கள். அந்த தருணங்களால் கடினமான சூழல்களை கையாள்வீர்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் துல்லியமாக கூற முடியாது நண்பர்களே.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்களது நிகழ் கிரக நிலைகள் மிக மிக வலிமையான ஒருங்கிணைப்பை பெற்றுள்ளன. அதே அளவுக்கு குழப்பத்துடனும் இருப்பீர்கள். சில இடங்களில் பொய் சொல்வதை தவிர உங்களால் எதையும் சொல்ல முடியாது. உங்கள் நிதிநிலை தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
சிறப்பான நாளாக இது அமையப் போகிறது. வெற்றி உங்கள் பக்கமே. எதற்காகவும் அஞ்ச தேவையில்லை. உங்கள் கைவிட்டு போன கெளரவம், மரியாதை பல மடங்கு வீரியத்துடன் உங்களை வந்து சேரும். உங்கள் ஆளுமையை இனி புரிய வைத்துக் கொண்டே இருப்பீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
தனித்தனியாக சில கோரிக்கைகள் வைப்பதைவிட உங்கள் மனதில் பட்டதை தெளிவாக கேட்டுவிடுவது நல்லது. விருப்பம் இருந்தால் மட்டும் முயற்சி எடுக்கவும். மற்றவர்களின் பேச்சைக்கேட்டு செயல்படுவதில் அர்த்தமில்லை.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
சமூகம், செயல்பாடு சார்ந்த விஷயங்களில் அதிகம் ஈடுபடுவீர்கள். சந்தர்பங்கள் உங்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். ஏன் என்று எதற்கும் கேட்கத் தேவையில்லை.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
தடைகளை உடைத்து எறிவீர்கள். உங்கள் இலக்குகளை எட்ட மேலும் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வழக்கமான பாணியையே கடைப்பிடித்து, அலுப்பை உருவாக்காதீர்கள். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்க இன்னும் உழைக்க வேண்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
பிரச்சனைகள் நீங்கும். துன்பங்கள் அகலும். சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். ஆனால், உங்கள் மனதில் தோன்றியதை பேசிவிட்டு, பின்பு வருத்தம் தெரிவிக்கிறேன் என சொல்லாதீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கடினமான நாள் இன்று. உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். முடிவு எடுப்பதில் தெளிவும், உறுதியும் வேண்டும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நீங்கள் கேட்டவை நிறைவேறும் நாள் இது. விரும்பியவை கிடைக்குமா என்பது சந்தேகமே. கேட்டதற்கும், விரும்பியதற்கும் வித்தியாசம் உண்டு. பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்கள் நிதி வளர்ச்சியை கணிசமாக மேம்படும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்களது தவறான முடிவுகள் சில மோசமான விளைவுகளை உங்கள் முன்னேற்றத்தில் ஏற்படுத்தும். செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால், அது பயனுள்ளதாகவே இருக்கும். சிமெண்ட் போட்டு உங்கள் வாயை மூடிக் கொண்டால் நல்லது. பேச்சைக் சற்று குறையுங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை.