Rasi Palan 18th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 18th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 18th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 18th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan 18th July: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 18th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 18th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 18, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

Advertisment
Advertisements

நண்பர்களை அதிக எண்ணிக்கையில் சம்பாதிப்பீர்கள். அதனால், நிச்சயம் உங்களுக்கு பலனுண்டு. ஆகையால், மகிழ்ச்சியாக இருங்கள். மழையை ரசிக்க உங்களு எல்லா உரிமையும் உண்டு. அப்போது ஐஸ்க்ரீம் சாப்பிடவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அது உங்களுக்கு நல்லதா என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இன்று மாலை வரை உங்களுக்கான நேர்மறை சிந்தனைகளுக்காக காத்திருங்கள். கொஞ்சம் பொறுமை தேவை. அப்படி காத்திருந்தால், நிச்சயம் அது உங்களை அடுத்த தளத்துக்கு கொண்டுச் செல்லும். உங்கள் முன் இருக்கும் கேள்விகளுக்கு இன்றே விடை காண முயற்சி செய்யுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

குழப்பம் ஏற்படும் இடத்தில் நீங்கள் நிச்சயம் உங்கள் வருகையை உறுதி செய்வீர்கள். சில தடுமாற்றங்கள் இருக்கும். தோல்வியும் கூட சேர்ந்து வரும். உங்களின் ஆளுமையில் சறுக்கல் ஏற்படலாம். ஆனால், அவற்றையெல்லாம் உங்கள் கிரக நிலைகள் சமாளித்துவிடும் என்பதால் கவலையில்லை.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உண்மைத் தன்மை எப்போதும் உங்கள் தேர்வாக இருக்காது. ஆனால், நிலைமைக்கு ஏற்ப சூழலை கையாள்வதில் தேர்ந்தவரான நீங்கள், தோல்விகளை சைடில் விடுவீர்கள். உங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வீர்கள். அதில் சமரசம் செய்துக் கொள்ள மாட்டீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்கள் திட்டங்களை நிச்சயம் மாற்றிப் பாருங்கள். சில வேலை எது சரி என நினைக்கிறீர்களோ, அது தவறாக முடியக் கூடும். உங்கள் இலக்கை வேறு வழியில் எப்படி அடைவது என்று யோசியுங்கள். ஒரு ஊருக்கு ஒன்பது வழிகள் இருக்கும். அந்த வழி எங்கு இருக்கிறது என்பதை கண்டறிவதே உங்கள் பணி.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மற்றவர்கள் உங்களுக்கு ஆலோசனை கூறவே விடமாட்டீர்கள். அது உங்கள் விருப்பம், சரி. அதற்காக 'உங்கள் வேலையைப் பாருங்கள்' என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும், தொழில் ரீதியாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ செல்ல நேரிடும். உங்களை தக்க வைக்க கடுமையாக போராடுவீர்கள். அதில், ஓரளவு வெற்றியும் காண்பீர்கள். ஆனால், முயற்சியை மட்டும் நிறுத்தாதீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருப்பீர்கள். பெண் தோழிகளிடமிருந்து ஆதரவான வார்த்தைகள் கிடைக்கும். அவை உங்களுக்கு உற்சாகமாக அமையும். காதல் மனைவியை மகிழ்விக்க குட்டிக்கரணம் எல்லாம் அடிக்க வேண்டாம். ஒரு சேலை எடுத்துக் கொடுத்தாலே போதும். இப்படித்தான் எதை எப்படி செய்வது என்று தெரியாது முழித்துக் கொண்டிருப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சமூகம் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு  நாட்டம் அதிகரிக்கும். இன்றைய நிமிடங்களை எப்படியாவது மகிழ்ச்சியாக செலவழித்து விடுங்கள். ஏனெனில், வரும் காலங்களில் மிக சோம்பேறியான நிமிடங்களையும், டென்ஷனான நொடிகளையும் அனுபவிக்கப் போகிறீர்கள். தயாராக இருக்கவும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

ஒவ்வொருவரும் உங்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்து அதை உங்களிடமே தெரிவிப்பார்கள். கிரக நிலைகள் இப்போது உங்களுக்கு எதிராகவே உள்ளன. உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை உதிர்த்து உங்களை உற்சாகப்படுத்த ஒரு தலையும் இருக்காது. சற்று எரிச்சலான நாள் என்றே சொல்லலாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எதிர்பாராத பயன்கள் சில உங்களை வந்துச் சேரும். இருப்பினும், ஆர்ப்பாட்டத்தை விடுத்து, அமைதியையே கடைபிடியுங்கள். பழங்காலக் கதைகளை சொல்லி யாராவது உங்களிடம் வந்தால், 10 கி.மீ அப்பால் ஓடுங்கள். ஏனெனில், அதையெல்லாம் கேட்க இப்போது உங்களுக்கு நேரமில்லை. இலக்கை குறி வைத்து பயணியுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

முடிவுகள் இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளில் இருந்து விடுதலை ஆவீர்கள். நீண்ட காலமாக நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: