மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
குடும்பத்தினரின் அன்பைப் பெறுவீர்கள். நிதிவிவகாரங்களில் தங்களின் நேரடியான அணுகுமுறை அவசியம். மற்றவர்களுக்காக ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். காதல் கைகூடும் வாய்ப்பு உள்ளது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கும் என்பதால், செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். சுயமுயற்சியே பலனளிக்கும் என்பதை எக்காலத்திலும் மறந்துவிட வேண்டாம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
திட்டமிட்ட காரியங்களை விரைந்து செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானப்போக்கு அவசியம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
ஷாப்பிங்கில் அதிக கவனம் செலுத்துவீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் அவசியம். முன்னர் செய்துவிட்டு பின்னர் வருத்தப்படவேண்டிய நிலை ஏற்படும் என்பதால் கவனம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கிரகங்களின் சாதகமான பார்வையினால் நற்பலன்களை பெறுவீர்கள். மனஉறுதியுடன் செயல்பட்டு எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
தவறான பாதையில் நான் பயணம் செய்து தோல்வியில் தான் முடிகிறது என்று மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவீர்கள். செயல்களில் முடிவு எடுப்பதற்கு முன்னர், ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
புதிய நண்பர்களின் வரவால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
வீடு மற்றும் பணியிடங்களில் சாதகமான போக்கு நிலவும். இருக்கும் இடத்தின் நிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். எது தேவையோ அதை மட்டும் செய்துவருவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பாதியில் நின்ற காரியங்களை முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நிதி விவகாரங்களில் அதிக கவனம் அவசியம். பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். உணவுபழக்கவழக்கத்தில் அதிக கவனம் அவசியம்
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மனஅழுத்தத்தால் அவதிப்படுவீர்கள். மன அமைதிக்கு தியானம் செய்ய வேண்டும். நேர்மறைத்தன்மையுடன் இருப்பதால் வெற்றி கிட்டும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
புதிய பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முதலீடுகள் மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.. குடும்பம் மற்றும் பணியிடங்களில் புத்துணர்வுடன் இருப்பீர்கள். வழக்கமான நடவடிக்கைகளிலிருந்து விலகிச்செல்வீர்கள்.