Today Rasi Palan, 18th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 18th March 2020: இன்றைய ராசி பலன், மார்ச் 18, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
Advertisment
Advertisements
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
எண்ணங்கள் விரும்பியபடி நிறைவேற காண்பீர்கள். பிரியமானவர்களுடன் வார இறுதி நாட்களை உற்சாகமாக கழித்து மகிழ்வீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் செலுத்தவும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
சந்திரனின் சாதகமான பார்வையினால் நினைத்தை சாதிப்பீர்கள். மற்றவர்களின் கருத்துகளை காது குடுத்து கேட்பது மனஸ்தாபாதத்தை தவிர்க்க உதவும். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
சுயமுன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். வாய்ப்புகளை தவற விடமாட்டீர்கள். உணவு விசயத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
சவால்களை முறியடித்து முன்னேற்றப்பாதையில் வெற்றிநடை போடுவீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியங்களை அனசாயமாக செய்து முடிப்பீர்கள்.வரவு அதிகமாகும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பலர் உங்களின் ஆலோசனை கேட்டு நடப்பர். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
கிரகங்களின் சாதகமான பார்வையினால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வீடுகளில் முக்கிய மாற்றங்களை செய்வீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பணியிடங்களில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பிறரால் பாராட்டப்படுவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். உங்களை தவறாக புரிந்துகொண்டவர்கள் தங்களது எண்ணங்களை மாற்றிக்கொள்வர்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. மாற்றங்கள் ஏற்பட காத்திருப்பது அவசியம். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நீண்டகால இழுபறிக்கு தீர்வு காண்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்களை தவறாக புரிந்துகொண்டு விலகியவர்கள் திரும்பி வருவர். உங்களுக்கு சாதகமான நிகழ்வுகள் நடந்தேறும். உங்கள் நன்னடத்தைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். வெளிவட்டார தொடர்புகளில் அதிக கவனம் அவசியம். கனவுகள் நனவாக கடின உழைப்பு அவசியம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil