மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
வெற்றிகரமான நாள். கரு தங்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடன் வசூலாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அலைச்சல் குறையும். திருமணம் விரைவில் நடைபெறும். பிள்ளையாரை வணங்கி இன்றைய நாளை துவங்குங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
தேவையில்லாத விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். கல்வியில் அதிக ஈடுபாடு உண்டாகும். மாணவர்களின் படிப்பின் மீதான ஆர்வம் எதிர்பார்க்காத அளவில் சிறப்பாக இருக்கும். குடும்ப உறவில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உடல் சோர்வு ஏற்படும். வீண் பிடிவாதம் கூடாது. திருமண உறவில் புரிதல் அதிகரிக்கும். கல்வித் தரம் மேம்படும். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிட்டு செயல்படுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறவில் நிம்மதி மீண்டும் ஏற்படும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பணிச் சூழல் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். வேலை இழப்பிற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. பாதுகாப்பின்மை உணர்வு மேலோங்கி இருக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
சில தடைகளுக்குப் பின் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். செயல்களின் முன்னுரிமையை உணர்ந்து அதன்படி வினையாற்றுங்கள். இன்று பணவரவுடன் செலவும் சேர்ந்து காணப்படும். சீரான நிதிநிலைமையை தக்கவைத்துக் கொள்ள திட்டமிடல் அவசியம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
இன்று பொறுமை மிகவும் அவசியம். பணியில் சில இறுக்கங்கள் காணப்படும். தைரியம் மற்றும் உறுதியின் மூலம் நீங்கள் வெற்றி காணலாம். குடும்ப விஷயங்களில் சூடான விவாதங்கள் நடைபெறும். அமைதியான அணுகுமுறையை கையாள்வது நல்லது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
குடும்ப சிக்கல்கள் அகலும். இவ்வளவு நாள் நீடித்த பிரச்சனைகள் விலகும். ஆனாலும், பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு தேவை. நல்லது, கேட்டது எதுவென்று பகுத்தறிந்து செயல்பட வேண்டியது அவசியம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
குழந்தை வளர்ப்பில் கவனம் அவசியம். நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். முடிவு எடுப்பதில் தெளிவாக இருங்கள். பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். பொறுப்புகளை திறமையாக கையாள்வதில் தடைகள் காணப்படும். உங்கள் குழந்தைகளின் மற்றும் குடும்பத்தின் வளர்ச்சி பற்றிய கவலை காணப்படும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மகிழ்ச்சிகரமான நாள். வெற்றி உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். சேமிப்பு கை கொடுக்கும். காதல் கைகூடும். குடும்ப உறவில் நிம்மதி நிலவும்.