Advertisment

Rasi Palan 18th May 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan May 18th, இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan june 15th, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan june 15th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 18th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 18th May 2020: இன்றைய ராசி பலன், மே 18, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நீண்ட நாட்களாக மனதில் நிலவி வந்த பாரம் குறையும். பெற்றோர்களின் அன்பைப் பெறுவீர்கள். கணிசமான தொகை உங்கள் கைக்கு வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சில தடைகள் வந்து  போனாலும், முடிவில் தெளிவாக இருப்பீர்கள். நேரம் பார்த்து எதிரியை வீழ்த்துவீர்கள். சரிசமமான எண்ணிக்கையில் வெற்றி தோல்வி, ஏற்ற இறக்கம் இருக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

கடுமையான சூழல்களையும் எளிதாக கடப்பீர்கள். உங்கள் முடிவுகளில் உறுதியாக இருப்பது நன்மை  என்றாலும்,அது மற்றவர்களை நோகடிக்க வண்ணம் செயல்படுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். விநாயகரை வழிபாட்டு வாருங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தெளிவான முடிவுகளை நோக்கி பயணம் மேற்கொள்வீர்கள். பணவரவு இருந்து கொண்டே இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் கைக்கொடுக்கும். புதிய மாற்றங்களுக்கு வித்திடுவீர்கள். மனிதர்களுக்கு ஏற்றவாறு வினையாற்றுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மகிழ்ச்சியான நாள். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரங்களிலிருந்து நல்ல தகவல்கள் வரும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதை அடுத்த நபர்களிடம் விட்டுவிடாதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

முக்கிய விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். நிதி விவகாரங்களில் திருப்திகரமான நிலை ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் மேற்கொள்வீர்கள். போட்டி, பந்தயங்களில் அதிக ஆர்வம் கொள்வீர்கள்.மற்றவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பது நல்லது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். உங்களை தவறாக புரிந்து கொண்டவர்களும் மனம்மாறி தங்களை வந்தடைவார்கள். வார்த்தைகளில் நிதானம் தேவைப்படும் நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். பண சேமிப்பு அபரிமிதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மனமறிந்து நடப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். வாகன போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு விளக்கு ஏற்றி வழி படுங்கள். நியாயமான விஷயங்களுக்கு கோபப்படுவதில் அர்த்தம் உள்ளது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மனசஞ்சலம் அதிகரிக்கும் நாள். அமைதியினால் எத்தகைய காரியத்தையும் எளிதில் சாதிக்கலாம் என்பதை உணர்வீர்கள். வெளியூர் பயணம் இனி உங்களுக்கு ஏற்படும். உடல்நலத்தில் கூடுதல் அக்கறை தேவை.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மகிழ்ச்சியான நாள், நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment