Today Rasi Palan, 18th October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 18th October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 18, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
எளிதான நேர்மையான அட்வைஸ்களை மற்றவர்கள் கொடுத்தால் கூட ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். இதனால், மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்தோடு உங்களை வீழ்த்த எண்ணுகிறார்கள் என்று அர்த்தமில்லை, கிரகங்கள் உங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த மறுக்கின்றன என்பதே உண்மை. இங்கு யாரையும் குறை சொல்லி பிரயோஜனமில்லை.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பணியிடங்களில் வாலை சுருட்டிக் கொண்டு இருப்பது உசிதம். உங்களின் வாய்ஸ் உரக்க கேட்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கு இது நேரமில்லை. கால அவகாசம் இல்லாமல் அடுத்தடுத்த பணிகளை ஒப்பந்தம் செய்வது, உங்கள் செயல்திறனை பாதிக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
அதிக தூரம் பயணம் செய்வீர்கள். கடந்த காலங்களை நினைத்து பயணப்படும் அந்த பயணம் இனிமையான அனுபவத்தைக் கொடுக்கும். தற்காலிகமாக நீங்கள் நிறுத்தி வைத்திருக்கும் பணிகளை இப்போது மீண்டும் தொடரலாம். உங்கள் நண்பர்களின் ஆலோசனைகளை கேட்கலாம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பணியிடத்தில் சாதுர்யமாக செயல்படுவீர்கள். பொருளாதார ரீதியாகவும், வேலை ரீதியகாவும் அடுத்தடுத்து முன்னேற்றங்களை காண்பீர்கள். நீங்களாக எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். நட்புகள் அதிகரிக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கிரகங்களின் நிலைப்பாட்டால், கைகளில் ஏந்திய தண்ணீரைப் போல பணம் உங்களிடம் இருந்து கரைந்து போகும். நிதிநிலைமை உங்களை சிரமப்படுத்தும். வேறு வழியில் பணம் திரட்ட நீங்கள் எடுக்கும் முயற்சியும் பெரிய வெற்றியைத் தராது. காஸ்மிக் விதிகளை மறக்க வேண்டாம் அன்பர்களே!.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
சில தடைகளுக்குப் பின் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். செயல்களின் முன்னுரிமையை உணர்ந்து அதன்படி வினையாற்றுங்கள். இன்று பணவரவுடன் செலவும் சேர்ந்து காணப்படும். சீரான நிதிநிலைமையை தக்கவைத்துக் கொள்ள திட்டமிடல் அவசியம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
இன்று பொறுமை மிகவும் அவசியம். பணியில் சில இறுக்கங்கள் காணப்படும். தைரியம் மற்றும் உறுதியின் மூலம் நீங்கள் வெற்றி காணலாம். குடும்ப விஷயங்களில் சூடான விவாதங்கள் நடைபெறும். அமைதியான அணுகுமுறையை கையாள்வது நல்லது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
குடும்ப சிக்கல்கள் அகலும். இவ்வளவு நாள் நீடித்த பிரச்சனைகள் விலகும். ஆனாலும், பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு தேவை. நல்லது, கேட்டது எதுவென்று பகுத்தறிந்து செயல்பட வேண்டியது அவசியம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
குழந்தை வளர்ப்பில் கவனம் அவசியம். நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். முடிவு எடுப்பதில் தெளிவாக இருங்கள். பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். பொறுப்புகளை திறமையாக கையாள்வதில் தடைகள் காணப்படும். உங்கள் குழந்தைகளின் மற்றும் குடும்பத்தின் வளர்ச்சி பற்றிய கவலை காணப்படும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மகிழ்ச்சிகரமான நாள். வெற்றி உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். சேமிப்பு கை கொடுக்கும். காதல் கைகூடும். குடும்ப உறவில் நிம்மதி நிலவும்.