Rasi Palan Today 19th December 2018 in Tamil : இந்த உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் இயற்கையின் சக்திக்கு உட்பட்டதே. அதில் மனித இனமே அதிகளவில் ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. வானிலை சாஸ்திரம், ஜோதிடம், ஜாதகம் என்று அவன் கண்டுபிடித்த ஆச்சர்யங்கள் அதில் ஒன்று. நமது தமிழ்.இந்தியன்எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம், நீங்கள் உங்கள் தின பலனை தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம், விதியையும் மதியால் வெல்ல முடியும். இன்று உங்களுக்கான ராசிபலன் இதோ,
Rasi Palan 19th December 2018 : இன்றைய ராசி பலன், 19 டிசம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
விமர்சனங்களை பாராட்டுகளாக மாற்றுவீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு எல்லா செயலிலும் அலுகூலத்தைக் கொடுக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். கற்பனையில் மிதந்து நேரத்தை வீணடித்த நிலை சற்று மாறும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பொறுமை தேவை. பண வரவில் சுணக்கம் இருந்தாலும், அதை சமாளிக்கும் வாய்ப்புகள் இந்த தினத்தில் கிடைக்கும். குடும்ப ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணி நிமித்தம் அழுத்தம் இருந்தாலும், குடும்பத்தை கவனியுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
சில சூழ்நிலைகளில் பதட்டம் ஏற்பட்டாலும், அதை தேவையில்லாத விவாதங்கள் மூலம், மேலும் பெரிதாக்க வேண்டாம். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காவிட்டாலும், அமைதியை கடைபிடியுங்கள். உங்களுக்கான நாள் விரைவில் வரும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். கம்யூனிகேஷன் லெவலில் உங்களுக்கு இருக்கும் குறைப்பட்டால் தான் சிக்கல்களை சந்திப்பீர்கள். இந்த பிரச்னையை போக்க, ஒருமுறைக்கு இரு முறை அனைத்தையும் கிராஸ் செக் செய்து முடிவு செய்யுங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
வீட்டையும் குடும்பத்தையும் பற்றியே சிந்தனை இருக்கும். கேள்விகளின் தருணம் முக்கியமானது தான். ஆனால், உணர்வுகள் அசுத்தமாகவும் வரையறுக்க கடினமாக இருக்கும் போதும், பதில் கிடைப்பது சிரமம் ஆகிறது. பணியிடத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவும். சுமாரான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
நல்ல கம்யூனிகேஷன் இருந்தால், இந்த நாள் உங்களுக்கு சிறந்த நாளாகும். இப்போது நீங்கள் உங்களை தெளிவடைய வைக்க எல்லாம் செய்துவிட்டீர்களா? அல்லது தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா என்பதே கேள்வி?
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என இப்போது உணரலாம். இந்த வாரம் முடிவதற்கு இவையனைத்தும் மாறும். சரியான திசையை நோக்கி பயனிப்பீர்கள். தெளிவு பிறக்கும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
எந்தவொரு செயலிலும் நிலையான ஒரு முடிவை உங்களால் எடுக்க முடியாது. தடுமாற்றத்தால், சில தோல்விகள் ஏற்படலாம். ஆனால், அது நிலையாகாது. விரைவில் இந்த துர்நிலை மாறும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
ஆச்சர்யங்களும், ரகசியங்களும் அடங்கியவராக நீங்கள் இருப்பீர்கள். இந்த நாள் அப்படியொரு நாளாக அமையும். உங்கள் எண்ணங்களை நீங்களே வைத்துக்கொள்வதற்கு நல்ல காரணங்கள் இருக்கலாம், நீங்கள் விரும்பும் வரை அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் உரிமை கோர முடியாது. மேலும், உங்களை நோக்கி ஒரு பொறுப்புமிக்க பணி வந்துக் கொண்டிருக்கிறது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
குழப்பங்களும், ஆர்வத் தூண்டுதலும் ஒரு சேர கலந்திருக்கும். இதுவே, உங்களை உடனே முன்னேற்றிக் கொள்ள தேவையான அடிப்படை என்பதை சிந்திக்க வைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியுற்றாலும், அதை நினைத்து வருந்த வேண்டாம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்கள் ஆற்றலை எங்கே பயன்படுத்த வேண்டும் என சிந்திக்க வேண்டும். உண்மையை வைத்து மட்டும் நிகழ் கேள்விகளுக்கு விடை காண முடியாது. பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.