VIDEOராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தொலைதூர நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து அனுகூலமான செய்தி வரும். விடுமுறைக்கால பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். மனமகிழ்ச்சி ஏற்படும் நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
மனசஞ்சலம் அதிகரிக்கும் நாள். அன்றாட நடவடிக்கைகளை மாற்றிச்செய்வதனால், சிறிது ஓய்வு கிடைக்கும். பணிச்சுமையினால் அவதிப்படும் நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நிதி தொடர்பான விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படும். கிரகங்களின் சாதகமற்ற பார்வையினால், செயல்களில் அதிருப்தி நிலையே நிலவும். எடுத்த முடிவுகளில் மாற்றம் மேற்கொள்வீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இந்த சந்தோஷம் அதிகநாட்கள் நீடிக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்வீர்கள். மன அமைதிக்கு தியானம் சிறந்த தீர்வாக அமையும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
செயல்களில் அதிக கவனம் அவசியம். சோம்பலை தவிர்ப்பது நல்லது. சிறிய விசயங்களிலும் அதிக கண்காணிப்பு தேவைப்படும் நாள். எதிர்பாராத திருப்பங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
நடப்பு பிரச்னைக்கு, கடந்த கால அனுபவங்களிலிருந்து தீர்வு காண முயல்வீர்கள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். நண்பர்களுடனான தொடர்பு மற்றும் அவர்களுடனான விவாதங்களில் உங்கள் கை ஓங்கியிருக்கும். பிரியமானவர்களிடம் மனம்விட்டு பேசுவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். அந்நியர்களால் அனுகூலம் உண்டு. வார்த்தைகளில் நிதானம் கடைப்பிடிப்பது நல்லது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுநலமாக இருப்பீர்கள். மனமகிழ்ச்சி அடைவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நிதிவிவகாரங்களில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால், இழப்பை தவிர்க்கலாம். மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பது பலவகைகளில் நல்லது. மன அமைதிக்கு தியானம் செய்யவும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
பணியிடங்களில் சக ஊழியர்களிடமிருந்து வந்த பிணக்குகள் ஒவ்வொன்றாக மறைய துவங்கும். எந்த செயலையும், ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மனசஞ்சலம் அதிகரிக்கும் என்பதால் தியானம் உள்ளிட்டவைகளை மேற்கொள்வது நல்லது. மற்றவர்களின் கருத்துகளிலிருந்து அதிகம் வேறுபடுவதால் குழப்பமான மனநிலையிலேயே இருப்பீர்கள். உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.