Advertisment

Rasi Palan 19th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 19th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 19th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan 19th July: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 19th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 19th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 19, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்களது இலக்குகளை முழுமையாக அறிய, திடமான நிதி நிலைமை வேண்டுமென்று கிரகங்கள் உங்களுக்கு புரிய வைக்கும். நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் தொலைவில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பணம் உங்களுக்கு இப்போது மிக அவசிய தேவையாக இருக்கிறது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற உங்கள் முன் அதற்கான வழி இருக்கும். ஆனால், அது இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ வரை உங்கள் கண்களுக்கு தெரியாது. மூளைக்கும் எட்டாது. கிரக நிலைகள் அப்படி. அதேசமயம், மற்றவர்களின் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்களது உணர்ச்சிகளை வெளிக்காட்ட யாரும் இன்றி தடுமாறுவீர்கள். உங்களுக்கான தேவை எது என்பதில் முதலில் தெளிவு பெறுங்கள். மற்றவர்களின் முகத்திற்கு நேராகவே எல்லாவற்றையும் கூறிவிடுவீர்கள். மனதில் பட்டதை அப்படியே பேசுவீர்கள். அதில் உள்ள சாதக, பாதக அம்சங்களை யோசிக்க மாட்டீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

எப்போதும் நண்பர்களுக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்கும் கடக ராசி நேயர்களே... கொஞ்சம் அடக்கி வாசிப்பது உங்களுக்கும் நல்லது; உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. பழைய செய்திகளை புதிய வெளிச்சத்தில் காண்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

புதிய படைப்புகளுக்காக பெரிதும் முயற்சி செய்வீர்கள். ஆனால், அதில் சில கால தாமதம் ஏற்படும். இருப்பினும், உங்களது பணி மற்றவர்கள் பாராட்டும்படியே இருக்கும். உங்களுக்கென்ற சில ரகசியங்கள் வெளியில் தெரியாத வரை உங்களுக்கு நல்லது. கவனமாக செயல்படுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

தனியாக தெரியாதவரை உங்களுக்கு பிரச்சனை இல்லை. அப்படி தெரிய ஆரம்பித்துவிட்டால், அதிகபட்ச தகவல்களை தெரிந்து கொள்வது உசிதம். மற்றவர்களை கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம் கன்னி ராசி அன்பர்களே!!

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

தொழில் செய்வதற்கான யோசனைகள் உங்களிடம் அதிகளவும் இருக்கும். மற்றவர்களுக்கு கீழ் பணியாற்ற இனி விரும்ப மாட்டீர்கள். எது இப்போது உங்களுக்கு தேவையோ, அதை நோக்கி பயணத்தை மேற்கொள்ளுங்கள். தீவிரமாக உழைத்தால் உங்களுக்கான காலம் வெகு தொலைவில் இல்லை.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

போராட்ட குணம் உங்களுக்கு இயற்கையில் இருக்கும். உங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அது வந்து சேருவது கொஞ்சம் தாமதமாகலாம். கோயிலுக்கு சென்றால், பூசாரியின் காலில் விழுந்து வணங்குங்கள். பூர்வ பாவங்கள் கழியும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

குழந்தை பாக்கியம் உண்டாகும். யாருக்காகவும், எதற்காகவும் அஞ்ச வேண்டாம். உண்மை உங்கள் பக்கமே. அனாவசிய பேச்சுகளை தவிர்த்து செயலில் கவனமாக இருங்கள். வெற்றி உறுதி.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இன்று கோவில் சென்று சம்பிரதாய முறைப் படி வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். இதன் மூலம் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடவும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இன்று நீங்கள் அதிகப் பணியில் மூழ்கி இருப்பீர்கள். புதிதாக ஒன்றை அடைவதில் உறுதியாக இருப்பீர்கள். கடினமாக உழைப்பதன் மூலம் வெற்றி காண்பீர்கள்.பணியிடச் சூழல் சிறந்த செயல்திறன் ஆற்ற சாதகமாக இருக்கும். உங்கள் வேலைத் தரம் உங்களின் திறமையை பறைசாற்றும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இன்று தேவையற்ற மனக் குழப்பங்கள் சுமையாக இருக்கும். நம்பிக்கையுடன் இருந்தால் நன்மை காணலாம். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது.பண இழப்பின் காரணமாக ஏமாற்றம் நிறைந்து காணப்படும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment