Advertisment

Rasi Palan 19th March 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 19th March 2019: மீண்டும் புத்துயிர் பெற்று விரைந்து முன்னேறுவீர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 19th March 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 19th March 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 19th March 2019 in Tamil: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையின் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 19th March 2019 : இன்றைய ராசி பலன், மார்ச் 19, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நீங்கள் ஒன்று நினைத்தால், நடப்பது வேறொன்றாக இருக்கும். சில ஆச்சர்யமான திருப்பங்கள் ஏற்படலாம். ஆனால், பாதிப்பு இருக்காது. நிலையான நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பணி நிமித்தமாக வேறு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படலாம். உடல்நிலையில் கவனிப்பு தேவை. வீட்டில் விரைவில் திருமண மேளச்சத்தம் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) 

உங்கள் ராஜாங்கம் தொடரும். ஆதிக்கம் தொடரும். உங்கள் முடிவுகளில் யாருக்காகவும் பின்வாங்க மாட்டீர்கள். உங்கள் பலமும், பலவீனமும் அதுவே. இன்று உங்களுக்கு அது பலம் தான். நிம்மதியான நாள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதற்கான உழைப்பும் உங்களிடம் அதிகமாகவே இருக்கும். உடல் நிலையில் பின்னடைவு ஏற்படும். கவனம் தேவை.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்கள் உடல்நலத்தில் பெரியளவில் அக்கறை தேவை. நேற்று நன்றாக இருந்தாலும், இன்று பாதிப்பு ஏற்படக் கூடும். உங்களுக்கான பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள். தேவையில்லாத சுமைகளை சுமக்காதீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்கள் பொருளாதாரத்தில் அக்கறையுடன் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. சற்று மோசமான பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே, சேமிப்பில் கையை வைத்துவிட வேண்டாம். எச்சரிக்கை தேவை.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

எந்தவொரு செயலிலும் நிலையான ஒரு முடிவை உங்களால் எடுக்க முடியாது. தடுமாற்றத்தால், சில தோல்விகள் ஏற்படலாம். ஆனால், அது நிலையாகாது. விரைவில் இந்த துர்நிலை மாறும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

ஆச்சர்யங்களும், ரகசியங்களும் அடங்கியவராக நீங்கள் இருப்பீர்கள். இந்த நாள் அப்படியொரு நாளாக அமையும். உங்களை நோக்கி ஒரு பொறுப்புமிக்க பணி வந்துக் கொண்டிருக்கிறது. ஆச்சர்ய திருப்பங்களும் காத்திருக்கிறது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குழப்பங்களும், ஆர்வத் தூண்டுதலும் ஒரு சேர கலந்திருக்கும். இதுவே, உங்களை உடனே முன்னேற்றிக் கொள்ள தேவையான அடிப்படை என்பதை சிந்திக்க வைக்கும். வெற்றிகரமான நாள் இது

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்கள் ஆற்றலை எங்கே பயன்படுத்த வேண்டும் என சிந்திக்க வேண்டும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். காதல் விவகாரம் கைக்கூடும். செலவுகளில் சிக்கனம் காட்டுவது நல்லது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என இப்போது உணரலாம். இந்த வாரம் முடிவதற்கு இவையனைத்தும் மாறும். சரியான திசையை நோக்கி பயனிப்பீர்கள். தெளிவு பிறக்கும்.

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment