மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நீங்கள் ஒன்று நினைத்தால், நடப்பது வேறொன்றாக இருக்கும். சில ஆச்சர்யமான திருப்பங்கள் ஏற்படலாம். ஆனால், பாதிப்பு இருக்காது. நிலையான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பணி நிமித்தமாக வேறு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படலாம். உடல்நிலையில் கவனிப்பு தேவை. வீட்டில் விரைவில் திருமண மேளச்சத்தம் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்கள் ராஜாங்கம் தொடரும். ஆதிக்கம் தொடரும். உங்கள் முடிவுகளில் யாருக்காகவும் பின்வாங்க மாட்டீர்கள். உங்கள் பலமும், பலவீனமும் அதுவே. இன்று உங்களுக்கு அது பலம் தான். நிம்மதியான நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதற்கான உழைப்பும் உங்களிடம் அதிகமாகவே இருக்கும். உடல் நிலையில் பின்னடைவு ஏற்படும். கவனம் தேவை.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உங்கள் உடல்நலத்தில் பெரியளவில் அக்கறை தேவை. நேற்று நன்றாக இருந்தாலும், இன்று பாதிப்பு ஏற்படக் கூடும். உங்களுக்கான பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள். தேவையில்லாத சுமைகளை சுமக்காதீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்கள் பொருளாதாரத்தில் அக்கறையுடன் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. சற்று மோசமான பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே, சேமிப்பில் கையை வைத்துவிட வேண்டாம். எச்சரிக்கை தேவை.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
எந்தவொரு செயலிலும் நிலையான ஒரு முடிவை உங்களால் எடுக்க முடியாது. தடுமாற்றத்தால், சில தோல்விகள் ஏற்படலாம். ஆனால், அது நிலையாகாது. விரைவில் இந்த துர்நிலை மாறும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
ஆச்சர்யங்களும், ரகசியங்களும் அடங்கியவராக நீங்கள் இருப்பீர்கள். இந்த நாள் அப்படியொரு நாளாக அமையும். உங்களை நோக்கி ஒரு பொறுப்புமிக்க பணி வந்துக் கொண்டிருக்கிறது. ஆச்சர்ய திருப்பங்களும் காத்திருக்கிறது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
குழப்பங்களும், ஆர்வத் தூண்டுதலும் ஒரு சேர கலந்திருக்கும். இதுவே, உங்களை உடனே முன்னேற்றிக் கொள்ள தேவையான அடிப்படை என்பதை சிந்திக்க வைக்கும். வெற்றிகரமான நாள் இது
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்கள் ஆற்றலை எங்கே பயன்படுத்த வேண்டும் என சிந்திக்க வேண்டும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். காதல் விவகாரம் கைக்கூடும். செலவுகளில் சிக்கனம் காட்டுவது நல்லது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என இப்போது உணரலாம். இந்த வாரம் முடிவதற்கு இவையனைத்தும் மாறும். சரியான திசையை நோக்கி பயனிப்பீர்கள். தெளிவு பிறக்கும்.