Today Rasi Palan, 19th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 19th March 2020: இன்றைய ராசி பலன், மார்ச் 19, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
Advertisment
Advertisements
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
புதுமுக நபரின் அறிமுகம் கிடைக்கும். புதுவித விஷயங்களை கற்பதில் அதீத ஆர்வம் காட்டுவீர்கள். வார்த்தைகளில் நிதானம் காப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
காலம் பொன் போன்றது என்பதற்கேற்ப, ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் பயன்படுத்துவீர்கள். செவ்வாய் கிரகத்தின் பலனால், குழந்தைகளுக்கு இடையே நிலவும் இன்னல்களை தீர்ப்பீர்கள். மற்றவர்களின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
அதிர்ஷ்டகரமான நாள். கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி நடக்கும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அதிக விரயம் ஏற்படும் நாள் என்பதால் கவனம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
முக்கியமான நிதி பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
வார்த்தைகளில் நிதானம் காத்தால், மற்றவர்களின் கோபத்திலிருந்து தப்பிக்கலாம். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருத்தல் நலம். மன சஞ்சலத்திற்கு தீர்வு கிடைக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மகிழ்ச்சியான நாள். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். செய்யும் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்பீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
இதோ முடிஞ்சதுனு என்று நினைக்கும் வேளையில் இன்னும் போகவேண்டியது உள்ளது என்பதை உணர்வீர்கள்.வரும் காலம் வசந்த காலம் என்பதை உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் சாதகமாக இருப்பர்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
எது நடந்ததோ அது நன்மைக்கே என்பதை உணர்வீர்கள். மகிழ்ச்சியான செய்தி விரைவில் வந்து சேரும். காத்திருந்ததற்கான பலனை அனுபவிக்கப்போகிறீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
எந்த விசயத்தையும் தீர விசாரிக்காமல், மற்றவர்களிடையே பகிர்வதனால் துன்பங்கள் தான் மிஞ்சும் என்பதை உணர்வீர்கள். நிதி விவகாரம் சீராக இல்லாததால், முக்கிய முடிவுகள் ஏற்படுவதை ஒத்திப்போடுவீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பழைய இலக்குகளை நிறைவேற்றி புதுவிதமான உத்வேகம் பெறுவீர்கள். பிரியமானவர்களின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நாளைய வினாக்களுக்கு விடை கிடைக்கும். மற்றவர்களின் ஆதரவினால் புதுப்புது முயற்சிகளில் அடியெடுத்து வைப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
சமீபகாலமாக புதுப்புது மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வீர்கள். அதனால் புதுவித அனுபவங்கள் கிடைக்கும். பழம் காய்த்து கனியாகும் வரை காத்திருக்கவும். நிச்சயம் பலன் உண்டு
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil