Advertisment

Rasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்... சிக்கல் ஆகிவிடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 19th October 2018, இன்றைய ராசி பலன் 19 அக்டோபர் 2018

Rasi Palan 19th October 2018, இன்றைய ராசி பலன் 19 அக்டோபர் 2018

Rasi Palan 19th October 2018 : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் புதிய அறிமுகமாக ‘இன்றைய ராசிபலன்’ எனும் புதிய பிரிவை வாசிப்பாளர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

Advertisment

தினமும் அனைத்து ராசி அன்பர்களுக்கும் தங்களது பலன்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பிரிவு அமையும். வாழ்க்கையில் சேஷமாக வாழவும், நம் முன் உள்ள தடைகளை ராசி மூலமாக அறிந்து, அப்புறப்படுத்தி ஒழுங்குப்படுத்தவும் இந்த பிரிவு உதவும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Rasi Palan 19th October 2018 : இன்றைய ராசி பலன் 19 அக்டோபர் 2018 :

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) 

உங்கள் யோசனைகளுக்கு எதிர்ப்பு கூறும் எந்த கூட்டாளிகளையும் ஆதரிக்காதீர்கள். நீங்களே ஒரு திட்டத்தை தொடங்குவதோடு, உங்கள் அன்பானவர்கள் தொடங்கும் திட்டங்களுக்கும் ஆர்வம் காட்டுவீர்கள்.

வேலை பார்க்கும் இடத்தில் இன்று உங்களுக்கு நல்ல காரியங்கள் கைக் கூட உள்ளது. நல்ல தகுதியான இடத்தை பிடிக்க, உங்களுக்கு இன்று அறிய வாய்ப்புகள் வந்தடைய உள்ளது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

ரிஷப ராசி காரர்களுக்கு இன்று பணி மற்றும் பொது கடமை வேலைகளில் சிறிய கடினம் ஏற்படும். ஆனால் அந்த கடினங்களும் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக கடந்து செல்லும். உங்களுடன் வேலைப் பார்ப்பவர்களுடன் நல்லுறவை கட்டிக் காப்பது அவசியம்.

சில விஷயங்களை தவிர்க்க முடியாது என்றாலும், அடுத்தக்கட்ட வேலையில் இறங்குவதற்கு முன்பு பொறுமையுடன் காத்திருந்தால் நன்மை உண்டாகும். ஆக இன்று உங்களுக்கு பொறுமையை கட்டிக் காக்க வேண்டிய நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

இன்றைய தினம் உங்களுக்கு சந்திரன் நம்பிக்கைக்குரிய இடத்தில் இருப்பதால், நடக்கும் எல்லா மாற்றங்களும் உங்களுக்கு சிறப்பாக அமைய அதிக வாய்ப்புள்ளது. எனவே நிகழும் மாற்றங்களில் அதிகமானவை உங்கள் வசம்.

அதே சமயம், நீங்கள் நினைக்கும் எல்லாமே கைக்கூடும் என்று உறுதியாக கூற முடியாது. அதனால் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று யோசனை செய்து அதற்கு ஏற்றார் போல் நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

இந்த ஆண்டு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய ஆண்டு. குறிப்பாக பணியிடத்தில் வழக்கத்தை விட அதிகமாக உழைப்பை நீங்கள் ஈடுபடுத்த வேண்டும். வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் வரம்புகள் நீங்கலாம். அதற்கு காரணம், குடும்ப வாழ்க்கை அல்லது வேலையில் தவிர்க்க முடியாத விஷயங்களாகக் கூட இருக்கலாம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

முயற்சிகளை கையில் எடுக்க வேண்டிய நாள். நீங்கள் இவ்வளவு நாள் பொறுமையுடன் காத்திருந்த வாய்ப்புகள் எல்லாம் கைக்கூடி வருகிறது. சந்திரன் 5வது இடத்தில் இருப்பதால், உங்கள் திறமைகள் மற்றும் முயற்சி எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை பெற்றுத் தரும். நீண்ட நாள் கனவு நினைவாகும் நாள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கன்னி ராசி காரர்கள் இன்று வலைந்து கொடுத்து போக வேண்டிய நாள். மற்றவர்கள் வழியை பின்பற்ற நீங்கள் சிரமப்படுவீர்கள். இதனால் வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுடைய உறவுகளை ஆதரித்து, ஊக்குவித்து நடப்பது நன்மையை உண்டாக்கும்.

அவர்கள் எதை செய்தாலும் குறுக்கே நிற்பதை தவிர்த்து, அவர்கள் வழியில் சென்றால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. புது மனிதர்கள் அறிமுகமாகளாம். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாள் இன்று இல்லை. ஆனாலும் எதையும் எளிமையாக எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சில காரியங்கள் இன்று இழுபறியாக இருக்கும், எனினும் உங்களின் உழைப்பு மற்றும் பொறுப்பாலும் எல்லாம் நன்மையிலேயே முடியும். இந்த நாள் மகிழ்ச்சியுடனே உங்களுக்கு நிறைவடையும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

இன்றைய பொழுதை அமையாக இருந்து பிரச்சனை எதுவும் இல்லாமல் கழித்துவிட்டால் போதும் என்ற மனநிலையில் இருக்கிரீர்கள். உங்களின் கிரக ஆற்றலின்படி, உங்கள் நண்பர்களும் தொழில் கூட்டாளிகளும் கூறும் அறிவுரையை அலசி ஆராய்ந்து பார்ப்பீர்கள். உண்மை உங்கள் கண் முன்னே புலன்படும் நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

தனுசு ராசி அன்பர்கள் உணர்ச்சிபூர்வமாக இருப்பதால் செய்யாத குற்றத்திற்கு கூட பொறுப்பேர்க்கக் கூடியதாகிவிடும். பொதுவாகவே உங்கள் கிரகங்கள் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு மேம்படுத்தி கொடுக்க உதவலாம். ஆனால் இன்று யாருடைய கடனுக்காகவும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளாதீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இன்றைய தினம் உங்கள் நண்பர்கள் சிலர் உங்களிடம் உதவி நாடி வருவார்கள். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். மற்றவர்களின் முன்னுரிமையை நீங்கள் கவனித்துக்கொள்வதன் மூலம், உங்களின் உரிமைகளும் நிறைவேற்றப்படும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பொதுவாகவே வணிகத்தில் உண்டாகும் போட்டியில், எதிர்ப்பு போட்டியாளரின் நிலைக் கூட உங்களுக்கு சாதகமாக முடியும். ஆனால் இன்று நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும். ஒரே ஒரு நபரை உங்களுடன் பிஸினசில் சேர்த்துக்கொள்ள நினைத்தாலும், அந்த நபரை பற்றி நன்கு தெரிந்து விசாரித்து முடிவெடுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

ஒரு லட்சிய கனவை நீங்கள் எப்போது நினைத்துக் கொண்டே இருப்பவர்கள். ஆனால் கூட்டுறவுச் செல்வாக்கினாலும், மற்றவர்களுக்கு எதிராக செயல்படுவதை தவிர்த்து விடுவீர்கள். பதிலாக மற்றவர்கள் கூறுவதை விமர்சிக்காமல் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ள கடுமையான முயற்சிகள் எடுக்க புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்வீர்கள்.

Lifestyle Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment