Rasi Palan 19th October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 19th October Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

By: Updated: October 19, 2019, 12:30:01 AM

Today Rasi Palan, 19th October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 19th October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 19, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

காதலிப்பவருக்கும், நண்பர்களுக்கும் ஒரே அளவிலான ஷெட்யூலை ஒதுக்குவீர்கள். வயது, அனுபவம், அதிக ஈர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மனிதர்களை இவ்விரு விஷயத்திலும் இணைப்பீர்கள். அவர்களது ஞானத்தால் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களுக்கு என்ன தேவை என்பது உங்களுக்கு தான் தெரியும். தனிப்பட்ட விருப்பங்களை நீங்கள் வெளிப்படுத்தினால் மட்டுமே தெரியும். இல்லாவிட்டால் மற்றவர்களுக்கு எப்படி உங்களைப் பற்றித் தெரியும்?

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்கள் விருப்பங்கள், கனவுகளில் இருந்து வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டிருப்பீர்கள். அதுவும், இன்று பயணம் செய்கிறீர்கள் என்றால், அது மிகவும் அதிக தூரத்திற்கு உங்களை இட்டுச் செல்லும். பயணத்தின் போது நீங்கள் சந்திக்கும் நண்பர்களே உங்கள் தாமதத்திற்கு காரணம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

இனி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிப்பீர்கள். குடும்பத்திலும், பணியிடத்திலும் திறமைசாலி எனும் பெயரை வாங்குவீர்கள். சேமிப்பின் மூலம் அதிக லாபம் பெறுவீர்கள். செலவுகள் இருந்தாலும், அதனை திறம்பட கையாள்வீர்கள். கூடிய விரைவில் பணி மாற்றமும், இட மாற்றமும் இருக்கலாம். பதவி உயர்வும், வருமான உயர்வும் பெறுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவரத் திட்டமிடுவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வாழ்வில் வளம் பெற புதிய சூழல் உருவாகும். ஆர்வமுடன் பயன்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. பணசேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சாதிப்பர்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

செயலில் புதிய திருப்பம் எதிர்கொள்வீர்கள். உண்மை நிலவரம் உணர்ந்து பணிபுரிய வேண்டும். தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். பணியாளர்கள் பாராட்டு பெறுவர், ஆதாய பணவரவு கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மனதில் ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பெறுகின்ற அனுபவம் புதுவிதமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மாறுபட்ட நிகழ்வு குறித்து அதிருப்தி ஏற்படலாம். பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. செலவுக்கு சேமிப்புப் பணம் பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மனதில் இனம் புரியாத வருத்தம் வரலாம். நண்பரின் ஆலோசனை நல்வழி காட்டும். தொழில், வியாபாரம் அக்கறையுடன் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

செயலில் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரி இடம் மாறி போகிற அனுகூலம் உண்டு. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் சுபசெய்தி வரும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Horoscope News by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 19th october 2019 rasi palan today rasi palan tomorrow

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X