Rasi Palan Today 1st April 2019 in Tamil: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 1st April 2019 : இன்றைய ராசி பலன், ஏப்ரல் 1, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
எச்சரிக்கை மணி அடிக்கும் போதே உஷாரவது தான் உத்தமம். உங்கள் கனவுகளை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதலில் அறியுங்கள். கவனமாக சூழ்நிலைகளை கையாளுங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கிரகங்கள் இன்று உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். உங்களுக்கு பிடித்த பழக்கங்களை செய்யுங்கள். ஏனெனில், அவைதான் இன்று உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்கள் பொழுதுபோக்குகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து, வேலையில் நாட்டம் செலுத்துங்கள். எதிர்பாராத திருப்பங்கள் வந்து சேரும் நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்களில் இருக்கும் மன அழுத்தங்களை வெளிக்கொணரும் நேரம் இது. மற்றவர்களிடம் கடினமான தருணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது எமோஷனல் வெளிப்பாடு அதிகம் இருக்க வேண்டிய நாள் இது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உறவுக்காரர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தை கண்டிப்பாக மாற்றியே ஆக வேண்டும். மரியாதை கொடுக்க பழகுங்கள். வாழ்கையை அதன் போக்கிற்கு விடாமல், கொஞ்சம் இழுத்துப் பிடியுங்கள். தனிப்பட்ட உறவுகளின் பிணைப்பு அதிகரிக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
எல்லாமே கடினமாக சென்றுக் கொண்டிருக்கிறதா? தெரிகிறது. ஆனால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நிதிநிலை உங்கள் கையை கடிக்கும். ஆனால், அதையும் மீறி குடும்பத்தை நிர்வகிக்க வேண்டியது உங்கள் கைகளில் தான் உள்ளது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்களை சுற்றி உலவும் பாசிட்டிவ் விஷயங்கள், உங்களை பிரகாசமாக வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு அழகாக தெரியும். நல்ல முடிவுகள் எடுப்பதற்கு நீங்கள் தான் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நல்ல நேரத்திற்காக காத்திருக்க நேரிடும். காதல் கைகூடும். ஆனால், கவனம் தேவை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி, நல்ல வாழ்வை தொலைக்க வேண்டாம். தொலைந்தால் மீண்டும் வராது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சிறிய விஷயங்கள் எல்லாம் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட சிக்கல்களை நண்பர்களுடனோ, துணையுடனோ பகிர்ந்து கவலையை விட்டு விலகுங்கள். உங்களால் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பணம் தொடர்பான சிக்கல்கள் தீரும். ஆனால், சில பண விவகாரங்களில் முடிவு எடுக்கும் போது ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் மகிழ்ச்சி உண்டாகும். கவனச் சிதறல்கள் நீங்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். சமூகம் சார்ந்த சூழல்களில் உங்கள் முகமும் தென்படும். இயற்கையான சூழலை நேசிப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வெற்றிகரமான நாள். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பணவரவு இருக்கும். உங்களின் திடமான மனநிலை சூழ்நிலைகளை உங்களுக்கு சாதகமாக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.