/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1380.jpg)
Rasi Palan 1st August: இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 1st August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 1st August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 1, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்களுக்கான நாள் இது. உங்களுடைய சிறந்த செயல்பாட்டினை இன்று வெளிப்படுத்துவீர்கள். தத்துவங்கள் பேசினாலும், கடமையில் கண்ணாய் இருப்பீர்கள். முடிவுகளை எடுப்பதில் நீடித்த குழப்பம் குறையும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நிதி நிலைமையை சரி செய்ய இப்போது நேரமில்லை. கனிவான வார்த்தைகளுக்காக ஏங்குவீர்கள். மனக் குழப்பம் சூழும். இருந்தாலும், நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் உங்களை ஓரளவுக்காவது சாந்தப்படுத்தும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
இன்றைய சந்திரன் பார்வை, உங்களது திறமையை அதிகம் வலுப்படுத்தும். நீங்கள் விரும்பாவிட்டாலும், வெற்றி உங்களை நோக்கி வந்தே தாரும். பெற்றோர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
கோபம் ஏற்பட்டால், உங்களை கட்டுப்படுத்துவது மிகக் கடினம். குழப்பங்கள் உங்களை ஆக்கிரமித்தாலும் அதனை கடந்து வருவீர்கள். மேலதிகாரிகளின் கருணை உங்களுக்கு உண்டு. ஆனால், தவறாமல் விநாயகரை வணங்கி ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள். அது தான் உங்களுக்கு நல்லது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
சந்திரனின் ஆதிக்கம் அதிகமாயிருப்பதால், உங்களுக்கும் வெற்றி எளிதில் வசப்படும். கணினி துறையில் பணியாற்றுபவர்கள் அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேறுவார்கள். மாணவர்களின் நுணுக்கமான கல்வித் தரம் உயரும். பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்துவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. எதற்காகவும், உங்கள் முடிவுகளில் இருந்து பின்வாங்க வேண்டாம். தேவைப்படும் நேரத்தில் ரியாக்ட் செய்து விடுங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு இப்போது துலாம் ராசிக்காரர்களுக்கு பிரகாசமாகி இருக்கிறது. சில துறைகளில் உங்களது திறனை அதிகரிக்க வேண்டும். அவசர முடிவுகளை அறவே ஒதுக்குங்கள். நேரமுள்ளது, சிந்தித்து செயல்படுங்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
சுற்றி சுற்றி சென்றாலும் கடைசியில் ஆரம்பித்த இடத்தில் தான் வந்து நிற்பீர்கள். உங்கள் கிரகம் அப்படி. வருந்த வேண்டாம். முன்னேற்றத்தை சிறிது காலத்தில் உணருவீர்கள். சர்க்கரை தொடர்பான உடல் உபாதைகள் உருவாக வாய்ப்புண்டு. உஷார்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கருத்தியில் ரீதயாக உடன் பணிபுரிபவர்களிடம் மாறுபடுவீர்கள். இதனால், செய்யாத தவறுக்கு சில சமயங்களில் மன்னிப்பு கேட்க நேரிடும். அப்போது வரும் ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சோதனை காலம் இது. விரைவில் நல்ல நிலைக்கு செல்வீர்கள். அப்போது, அதை நினைத்து சிரித்துக் கொள்வீர்கள். சுதாரிப்பாக இருக்க வேண்டிய வாரம் இது என்று கூட சொல்லலாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
காதல் கைகூடும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனை முக்கியமான கட்டங்களில் கைக் கொடுக்கும். தீவிர ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
சாதாரண விஷயம் தானே என்று எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் மௌனமாக இருப்பதால், அது தலைக்கனம் என்று பணியிடத்தில் சிலர் எண்ண வாய்ப்புண்டு. கிணற்றில் போட்ட தவளையாக அப்படியே இருக்காமல், புதிய முன்னேற்றத்தை நோக்கி நகருங்கள். ஏனெனில், உங்கள் அமைப்பின் படி, நல்ல முன்னேற்றத்தை உணருவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பிரசவ நிலையில் உள்ள பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளிப் பயணங்களை விரும்பினாலும் செல்ல வேண்டாம். பணவரவில் சகஜ நிலை நீடிக்கும். வேலை வாய்ப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.