சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உறவினர்களின் தொல்லை இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் வந்த பிரச்சனைகள் முற்றிலும் விலகும். நண்பர்கள் வகையில் நிறைய உதவி கிடைக்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு. கணவன் – மனைவி உறவில் விரிசல் நீங்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உடன்பிறப்பு வகையில் பண விரயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் தவறான சேர்க்கையை தவிர்க்கவும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும். மிக கவனமாக அனைத்தையும் கையாள வேண்டியது அவசியம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குல தெய்வ பிராத்தனை நிறைவேறும். கடன் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய வாய்ப்புகள் வரும். மனமாற்றம் ஏற்படும். காதல் விவகாரம் கைகூடும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
சாதுரியமான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவருவீர்கள். உடன்பிறந்தோர் நலனில் அக்கறை கொள்ளவும். பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். தொழில், வியாபாரத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
சில தடுமாற்றம் இருந்தாலும், கவலை வேண்டாம். சிறு சிறு சலசலப்புகள் வந்து நீங்கும். அது உங்கள் பொறுமையை சோதித்துப் பார்க்கும் அம்சமே. இறுதியில் வெற்றி உறுதி. குடும்பத்தில் நிம்மதி நிலவும்.