Rasi Palan 1st January 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 1st January 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 1st January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 1st January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 1, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் பணிகளில் அதிக ஈடுபாட்டோடு செயல்படுவீர்கள். ஆனால், பணியில் அதிக அழுத்தம் காரணமாக சில இடைவெளிகள் விழும். அப்போது, உங்கள் அதிகம் நேசிக்கும் நபர்கள் யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். திரைக்கு பின்னால் நின்று கொண்டு கண்ணீர் வடிப்பவர்களை இன்னும் கொஞ்சம் நடிக்கச் சொல்லி மகிழ்வீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நீங்கள் செயல்படுத்தலாம் என்ற எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. உங்களுக்கு நெருக்கமான உறவுகளை தவறவிட்டுவிட வேண்டாம். அவர்களது வெவ்வேறு நிறங்களுக்கு நீங்கள் வண்ணம் பூச வேண்டாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சமீபத்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் உங்கள் வருமானம் பெருகும். வெற்றியோ, தோல்வியோ பெரும் கடலில் சிறு துளியாக உங்கள் பணி இருக்கும். உங்கள் கொள்கைகளில் உறுதியாக இருப்பீர்கள் நண்பர்களே.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் பொருளாதாரம் உயர்ந்து வருவதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள், சேமிப்பு பழக்கத்தை தொடர்ந்து கொண்டே இருக்கவும். இனி வெற்றி உறுதி என்பதில் சந்தேகமில்லை. இனி வரும் காலம் உங்களை உச்சத்திற்கு கொண்டுச் செல்லும் =.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மன அழுத்தத்தை நீங்கள் உணருகிறீர்கள் என்றால், அது நீங்களாக தேடிக் கொண்ட, நேர பகுப்பாய்வின் தோல்வியின் முடிவேயாகும். நேரடியாக போட்டியை சந்திக்க தயாராகுங்கள். வெற்றி நிச்சயம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கொஞ்ச நேரமாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யவும். பெற்றோர்களுக்கான  கடமையை தவறாது செய்தால் வெற்றி வந்து சேரும். உங்கள் கிரக நிலைக்கு விநாயகரை வழிபட்டு வருவது நல்லது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. கடினமான வேலைகளில் கமிட்டாக வேண்டாம். யாருக்காகவும் எதற்காகவும் சாட்சி கையெழுத்தாகவும் போட வேண்டாம். பிஸியாக இருப்பது இப்போது உங்களது பேஷனாகிவிட்டது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நண்பர்களுக்காக தியாகம் செய்தது போதும். குடும்பத்தை சற்று கவனியுங்கள். நேரமின்மை என்பது அனைவருக்கும் பொதுவான பிரச்சனை தான். ஆனால், அதனை கையாள்வதில் தான் பலரும் கோட்டை விடுகிறார்கள். விருச்சிக ராசி அன்பர்களும் அப்படித்தானோ….

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சந்திரன் உங்களுக்கு சாதகமாகத் தான் உள்ளது. ஆனால், மற்ற கிரக நிலைகளின் அமைப்புகளால் இன்று நிச்சயமற்ற நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதி தேவை. சில தடுமாற்றங்கள் ஏற்படும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மற்றவர்களிடம் இருந்து முட்டாள்த்தனமான ஐடியாக்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் இலக்கை நோக்கி முன்னேறி சென்றுக் கொண்டே இருங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நீங்கள் எதிர்பார்த்த தருணங்கள் வந்து சேரும். வெற்றிகரமான நாள் இது. உங்கள் திட்டங்கள் செயல் வடிவமாக மாறும் தினம் இது. கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்ததால், பக்குவத்துடன் செயல்பாடுகளை அணுகுவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அது உங்களை மேலும் வலிமையான நபராக மாற்றும். மன அழுத்தங்கள் குறையும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்.

Get all the Latest Tamil News and Horoscope in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Rasi Palan by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close