/tamil-ie/media/media_files/uploads/2019/05/z778.jpg)
Rasi Palan 1st June: இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 1st June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 1st June 2019 : இன்றைய ராசி பலன், ஜூன் 1, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நேரடியாக நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் சற்று விலகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருமளவு கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் விரைவில் உங்களை தேடி வருவார்கள். சில ஆறா காயங்கள் உங்களை வேதனைப்படுத்தினாலும் இறுதியில், மகிழ்ச்சி உங்களை ஆக்கிரமிக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்களின் வேகம் உச்சக்கட்டத்தில் இருக்கும். ஏற்ற இறக்கமாக இருந்த முன்னேற்றம் தொடர் ஏற்றம் பெறும். நல்ல வேலைவாய்ப்பு அமையும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மன நிறைவான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கடினமான நாள் இது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். இருப்பினும், தொடர்ந்து சவால்களை சந்திப்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
ஏற்றம்… இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை இன்று அனுபவிப்பீர்கள். உங்களின் பாதை என்னை என்பது புலப்பட ஆரம்பிக்கும். பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்குவீர்கள். உங்களுக்குள் இவ்வளவு திறமையா என்று பணியிடத்தில் உள்ள மற்றவர்களை ஆச்சர்யப்பட வைப்பீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். உங்களின் செயலிலும் வேகம் தெரியும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். கிரகங்கள் உங்களுக்கு சாதமாக அமைகின்றன. சில இடங்களில் மட்டும் தடுமாறுவீர்கள். திருப்தியான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பெரும்பாலான சவால்களை கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருப்பீர்கள். துணிச்சல் உங்களின் பலம் என்றால், எல்லோரின் கருத்தை கேட்பது உங்கள் பலவீனம். நாசூக்காக சில சங்கடங்களை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. நிம்மதியான நாள் இன்று.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கடவுள் வழிபாட்டுடன் இன்றைய நாளை நீங்கள் துவங்க வேண்டியது அவசியம். உங்களைச் சுற்றி நிலவும் குழப்பமும், பதட்டமும் நெகட்டிவிட்டி பரப்பும். உங்கள் தோல்விக்கு அவையே காரணம். மனம் விட்டு வழிபடுங்கள். வெற்றி நிச்சயம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அந்த நட்பால் சில பலன்களும் தேடி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வெற்றிகரமாக உங்களுக்கு கொடுத்த பணியை முடிப்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
முடியாத செயல்களை விட்டுவிடுங்கள். அதற்காக தேவையில்லாமல் நேரத்தையும், ஆற்றலையும் வீணடிக்க வேண்டாம். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கவில்லை என்றாலும், உங்களுக்கான மதிப்பு குறையாது. ஆக்ரோஷமான உங்கள் மனநிலைக்கு நிச்சயம் அமைதி தேவை.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
தொடர் வெற்றிகள் உங்களை மகிழ்விக்கும். அதனால், உண்டாகும் போதைக்கு மயங்க வேண்டாம். ஸ்மார்ட் ஒர்க் தான் உங்களின் அடையாளம். இன்றும் அது தொடரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
தகுதியான இடத்தில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. சில நேர்மையான எண்ணங்கள் உங்களை மேலோங்க வைக்கும். உங்களது கடந்த கால தவறுகள் மறைந்தும், மறந்தும் போகும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வார்த்தைகளை உபயோகிக்கும் போது, மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும் வாய்ப்பு திடீரென உருவாகும். நட்டமடைந்த தொழிலைப் பற்றி மீண்டும் யோசிக்க வேண்டாம். ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வாருங்கள், குழப்பங்களில் இருந்து தெளிவு பிறக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.