Advertisment

Rasi Palan 1st May: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 1st May Rasi Palan in Tamil: சூரியன் உங்கள் துணை நிற்பதால், வெற்றி வசப்படும். தடுமாற்றங்கள் வெகுவாக குறையும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 1st May: இன்றைய ராசிபலன்

Rasi Palan 1st May: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 1st May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 1st May 2019 : இன்றைய ராசி பலன், மே 1, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் இலக்கை நோக்கி முன்னேறி சென்றுக் கொண்டே இருங்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். ஆனால், மற்ற கிரக நிலைகளின் அமைப்புகளால் தெளிவற்ற மனநிலை இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதி தேவை. சில தடுமாற்றங்கள் ஏற்படும். இருப்பினும் சமாளித்து விடுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நீங்கள் எதிர்பார்த்த தருணம் கிடைப்பதில் சில காலதாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் சுபம் உண்டாகும். உங்கள் திட்டங்கள் செயல் வடிவமாக மாறும் தினம் இது. கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்ததால், பக்குவத்துடன் செயல்பாடுகளை அணுகுவீர்கள். தோல்விகளையும் கடந்து செல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தவறுகளில் இருந்து பாடம் கற்பீர்கள். முன்னேற்றமான நாட்களை இனி சந்திப்பீர்கள். தோல்விகள் உங்களை மேலும் வலிமையான நபராக மாற்றும். மன அழுத்தங்கள் குறையும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நீங்கள் ஒதுக்கினாலும் பிரச்சனைகள் உங்களை ஒதுக்காது. சில முயற்சிகளில் சறுக்கல்களை சந்திப்பீர்கள். சுயக்கட்டுப்பாடு இன்றி சிரமப்படுவீர்கள். விநாயகர் வழிபாடு இன்னல்களை குறைக்கும். தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், சில காலத்திற்கு ஒத்தி வையுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

சூரியன் உங்கள் துணை நிற்பதால், வெற்றி வசப்படும். முன்னர் இருந்த சில தடுமாற்றங்கள் வெகுவாக குறையும். சுய ஆர்வம் கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அதுவே உங்களை முன்னேற வைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

விலாவாரியாக எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருக்காமல், உங்கள் பணியை மட்டும் கவனியுங்கள். அரசுப் பணிகளுக்கு தயார் ஆகுபவர்கள், இன்று மறக்காமல் சிறிது நேரமாவது படித்தால் நல்லது. வெற்றி வந்து சேரும் நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நண்பர்களின் ஆலோசனைக் கேட்டு நடக்க வேண்டும். திட்டம் போட்டு செலவுகளை சமாளியுங்கள். ஆடம்பரத்தை சற்று ஒதுக்கி வையுங்கள். எண்ணெய் சார்ந்த பலகாரங்களை இன்று ஒதுக்கினால் நல்லது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

பொய் சொல்வதை தவிர்க்கவும். கிரகங்கள் உங்களுக்கு எதிராக இருப்பதால், சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. வாயுப் பிரச்சனை அதிகமாகும். அமைதியை கடைபிடியுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வெற்றிகரமான நாள். வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு பல நாள் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த பாடங்கள் எளிதில் உள்வாங்கப்படும். குடும்ப உறவில் சிக்கல் நீங்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மன அழுத்தம் குறையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மருத்துவம் தொடர்பான செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு. குழந்தைகள் பரமாரிப்பில் கவனம் தேவை. மகிழ்ச்சியும், சிக்கலும் கலந்த நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. காதலில் நல்ல பதிலை எதிர்பார்க்கலாம். வெற்றி எனும் தேவதை இன்று உங்களுடன் இருக்க விரும்புகிறாள். அதேசமயம் கவனம் தேவை.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment