Today Rasi Palan, 1st May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 1st May2020: இன்றைய ராசி பலன், மே 01, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
விழிப்புடன் இருந்தால் விபத்துகளிலிருந்து தப்பிக்கலாம். கவனக்குறைவினால் பணியிடங்களில் அசவுகரியங்களை சந்திக்கலாம் என்பதால் கவனம் அவசியம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரியமானவர்களிடமிருந்து அதிசய பரிசு வந்து சேரும். தலைமை ஏற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
அதிக விரயம் ஏற்படும் என்பதால், நிதிவிவகாரங்களில் அதிக கவனம் அவசியம். காத்திருந்தால், எந்த விசயங்களிலும் தீர்வு கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
வழக்கத்துக்கு மாறாக அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். பணியிடங்களில் தடைகளை தகர்த்து எறிவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பயணங்களால் புத்துணர்வு பெறுவீர்கள். ஆன்மிகத்தால் ஆனந்தமடைவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்க இருப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உறவுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம் வேண்டும். பேச்சுவார்த்தைகளினால் எந்த விசயத்திற்கும் தீர்வு பெறலாம் என்பதை உணர்வீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
அனுபவ அறிவு என்றும் வீண்போகாது என்பதை உணர்வீர்கள். பெரியவர்களின் அனுபவ ஆலோசனை, தக்கநேரத்தில் கைகொடுக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது நல்லது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
புதிய தளத்தில் ஜொலிக்கப்போகிறீர்கள். எதிர்பாராத அளவில் பெருந்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சியான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
நிதி சார்ந்த விவகாரங்களில் அதிக விழிப்புடன் இருப்பதனால், மனசஞ்சலத்தில் இருந்து தப்பிக்கலாம். உங்களின் கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பிரியமானவர்களுக்கான உங்களது வழக்கமான நடைமுறைகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். முன்கோபத்தால் நண்பர்களை இழக்க நேரிடும் என்பதால் கவனம். முக்கிய விவகாரங்களில் பங்காளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
வாழ்க்கைமுறையில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதனால், எண்ணற்ற லாபங்களை அடைவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். மனம் அடிக்கடி சஞ்சலம் அடையும் என்பதால் தியானம் மேற்கொள்வது நல்லது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
திறந்த மனதுடன் செயல்பட்டு முக்கிய விவகாரங்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிரியமானவர்களிடமிருந்து அளவிலா அன்பும், நண்பர்களிடமிருந்து உதவியும் கிடைக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil