Today rasi palan, rasi palan july 13th, இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 1st November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 1st November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 1, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
Advertisment
Advertisements
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
சுகமான நாட்களாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். கடினமான
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
சில சோதனைகளை கடந்தே இன்றைய நாளை நிறைவு செய்வீர்கள். அதற்காக, வருந்த வேண்டாம். வாழ்க்கை என்பதே படிப்பினை தானே. அடுத்த நிமிடன் உறுதியில்லாத இந்த வாழ்க்கையில், அனுதினமும் பாடம் தான். மன உறுதியோடு செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கேஷுவல் டீலிங் என்பது உங்களுக்கு கை வந்த கலை. இன்று உங்களுக்கான நாள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சிறிது எச்சரிக்கையுடன் இருப்பது உங்களது வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும். அது உங்களுக்கு நன்மை தானே.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளையே ஓவர்டேக் செய்வீர்கள். அந்தளவுக்கு உங்கள் பணியில் கடுமையாக உழைப்பீர்கள். உங்கள் வேகத்தை யாராலும் தடுக்க முடியாது. தடுக்க நினைப்பவர்களும், உங்களுடனேயே சேர்ந்து பயணிக்க தயாராகி விடுவார்கள். வெற்றி உங்களுக்கே.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மற்றவர்கள் மீதான உங்கள் கவனத்தை திருப்புங்கள். முதலில் உங்களை கவனியுங்கள். உங்கள் வேலைகளை முடித்துவிட்டீர்களா என்று பாருங்கள். வீண் விவாதங்கள் வேண்டாம். அவப் பெயர்களை சுமக்க நேரிடும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பெற்றோர்களின் அன்பைப் பெறுவீர்கள். புகுந்த இடத்திலும், உங்களுக்கான இடத்தை அன்பால் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள் இன்று. உங்களுக்கே உரித்தான சோம்பேறித்தனத்தை மட்டும் விட்டொழிய முயற்சி செய்யுங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
சிறிய விஷயங்களுக்கெல்லாம் ரியாக்ட் செய்ய வேண்டாம். அதில், உங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. ஆகையால், நிலவரத்தை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
புதிய முயற்சிகளில் இன்று முடிந்தளவு ஈடுபட வேண்டாம். தள்ளிவைக்க முயற்சி செய்யுங்கள். குறிப்பாக, வரன் பார்க்க துவங்குவதாக இருந்தால், இன்று ஈடுபட வேண்டாம். விநாயகரை வழிப்பட்டு இன்றைய நாளை தொடங்குங்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சலுகைக்காக காத்திருப்பதில் அர்த்தம் இல்லை தனுசு ராசி அன்பர்களே… உங்களுக்கானதை நீங்கள் தான் கேட்டுப் பெற வேண்டும். யாருக்காகவும் உங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டாம். நிதானத்தையும் கைவிட்டுவிட வேண்டாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வாழ்க்கை சுலபமானது அல்ல என்பதை இன்று அறிந்து கொள்வீர்கள். வாய்ப்புகள் கைக்கு அருகே வந்தும் தட்டிப் போகும். என்னடா வாழ்க்கை இது சில சமயங்களில் நினைக்கத் தோன்றும். ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்று ஒன்று இருக்கவே செய்யும் என்பதை மறக்க வேண்டாம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
சில அதிரடியான நடவடிக்கைகளில் இன்று ஈடுபடுவீர்கள். தொடர் தோல்விகளே இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது என்பதில் ஆச்சர்யம் வேண்டாம். இருப்பினும், நண்பர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது உசிதம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்களில் பெருமளவு குறைப்பீர்கள். குடும்பத்தில் மீண்டும் நிம்மதி பெருகும். அதற்காக நீங்கள் இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீண் போகாது. மகிழ்ச்சி மீண்டும் திரும்பும் நாள் இன்று.