scorecardresearch

Rasi Palan 1st September 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 1st september 2020 rasi palan today – இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 1st september, இன்றைய ராசிபலன்
Rasi Palan Today 1st september, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 1st September 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 1st September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 1, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நம்பிக்கையுடன் நாளை துவக்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். நிதிவிவகாரங்களில் திருப்தி நிலவும். மகிழ்ச்சியான நாள்

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மற்றவர்களின் பேச்சுகளை காதுகொடுத்து கேட்பது நல்லது. மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம். காரிய தாமதத்திற்கான காரணத்தை உணர்வீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

தனிமையில் இருப்பதை தவிர்ப்பீர்கள். நிதி விவகாரம் மனதை சஞ்சலப்படுத்தும். கடந்தகால நடவடிக்கைகளிலிருந்து புதிய அனுபவங்களை பெறுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

சிறப்பான நாள். எண்ணிய காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். திறமைகளால் முன்னேற்றம் காண்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

இழுபறியாக இருந்த விசயங்களில் தீர்வு காண்பீர்கள். மனதில் புது உத்வேகம் பிறக்கும். மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். வார்த்தைகளில் நிதானம் நிறைந்திருக்கும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

முன்னெச்சரிக்கையாக இருப்பீர்கள். பங்காளிகடையே மனக்கசப்பு தோன்றலாம். உங்களின் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகம் உணர்ச்சிவசப்படும் நாள். சுதந்திர தன்மையை உணர்வீர்கள். நல்லெண்ணம் அதிகரிக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பிஸியான நாள். தங்களின் அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்வீர்கள்.தேவையற்ற ஒப்பந்தங்களால் கால விரயம் ஏற்படலாம். உணவு பழக்க விசயத்தில் கவனம் தேவை.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நிதிவிவகாரங்களில் சுணக்க நிலை ஏற்படும். பங்காளிகளால் மனக்கசப்பு ஏற்படலாம். செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

முக்கிய செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவு செய்வீர்கள். பணியிடங்களில் மதிப்பு அதிகரிக்கும். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

தடைகளை தகர்த்தெறிந்து இலக்குகளை நோக்கி நடை போடுவீர்கள். முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கனவுகள் நனவாகும். மகிழ்ச்சியான நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நிதிவிவகாரங்களில் அதிக கவனம் வேண்டும். சுயநலமாக இருப்பீர்கள். சுயதேவைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan 1st september 2020

Best of Express