Advertisment

Rasi Palan 20th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 20th August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan May 22nd, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan May 22nd, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 20th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 20th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 20, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

எந்தவொரு விஷயமாக இருந்தாலும் விரைந்து முடிவெடுப்பீர்கள். எப்பேற்பட்ட கடினமான களமாக இருந்தாலும், சாதகமான சூழலை நிலைப்படுத்தி வைத்திருக்க முயற்சி செய்யுங்கள், உங்களை அது பாதுகாக்கும். உங்கள் எதிர்கால திட்டங்கள் நிறைவேறும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கடமை உணர்வோடு பணியாற்றுவீர்கள். உங்களின் மேன்மையை அது மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும். போராட்டம் தான் உங்களுக்கான வெற்றியைத் தேடி தரும் என்பதை மறக்க வேண்டாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்களின் மிகப்பெரிய சொத்து, உங்கள் நண்பர்கள் தான். உங்கள் கடினமான மற்றும் மகிழ்ச்சியான காலம் என எதுவாக இருந்தாலும், அவர்கள் உங்கள் துணை நிற்பார்கள். எடுத்த செயலை முடித்துவிட்டு, நகர்ந்து சென்றால் தொடர் வெற்றிகளை பதிவு செய்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களுக்கு பிடித்த வேலையை மட்டும் செய்வீர்கள். ஏன் நீ பொறுப்பேற்கவில்லை? என்று உங்களிடம் கேட்டால் கோபம் கொப்பளித்துக் கொண்டு வரும். ஆனால், பொறுப்பேற்றுக் கொண்டால் மேன்மை உங்களுக்கே. நிம்மதியான நாள் இன்று.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது தடுமாறுவீர்கள். இதனால், சில தோல்வியை பதிவு செய்ய நேரிடும். உங்கள் திறமைக்கு ஏற்ற ரிசல்ட் கிடைக்காமல் போகலாம். அதற்காக முயற்சியே செய்யாமல் இருக்க வேண்டாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

எதற்காக ஓட வேண்டும் என்ற சலிப்பு ஏற்படும் அபாய காலக் கட்டம் இது. அபாய நாள் இது. கான்ஃபிடன்ட் லெவல் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்யுங்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நிறைய வாய்ப்புகள் உங்கள் கண் முன்னே இருக்கின்றன. அதில் உங்கள் தேர்வு எது என்பதே உங்களுக்கு வைக்கப்படும் அமில சோதனை. நீங்கள் திறமைசாலியாக இருந்தாலும், உங்களுக்கான சோதனை இது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

எதற்காகவும் உங்கள் கொள்கையில் இருந்து பின் வாங்க வேண்டாம். வெளிநாடு செல்லும் அமைப்பு நெருங்கி வருகிறது. தயாராக இருங்கள். குடும்பத்தில் நிலவிய மௌனம் நீங்கும். நம்பிக்கை பிறக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

முதல் படியில் சறுக்கலாம். அஞ்ச வேண்டாம். தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருங்கள். தனி ஆளாக எதையும் சாதிக்க முடியாது என்பது உணர்ந்துவிட்டாலே, உங்களைச் சுற்றி நிலவும் பல பிரச்சனைகளுக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நண்பர்களையும், குடும்பத்தையும் சரி சமமாக பேலன்ஸ் செய்து ஒவ்வொரு தினத்தையும் வெற்றிகரமாக கடந்து வருகிறீர்கள். இன்றைய தினமும் அப்படித்தான். நீர்த்து போன பழைய விஷயங்களை தோண்டி எடுத்து நேரத்தை விரயம் செய்யாமல் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

களத்தில் அதிரடியாக இறங்குவதற்கான நேரம் உங்களுக்கு வந்துவிட்டது எனலாம். யாருக்காகவும் இனி உங்கள் பணி தாமதமாகாது. சிறப்பு பரிசுகளுடன் உங்களுக்காக ஒருவர் காத்திருக்கிறார். உங்கள் அன்பிற்கு நெருக்கமானவர். மகிழ்ச்சியான நாள் இன்று.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

சேவை தேவை என்று போர்டு போடாத குறையாக தடுமாறிக் கொண்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை இல்லாதது தான் உங்கள் சறுக்களுக்கு முக்கிய காரணம். நண்பர்களின் ஆலோசனையை கேட்டுக் கொள்ளுங்கள். ஆனால், முடிவு உங்களுடையதாக இருக்கட்டும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment