Rasi Palan 20th July 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 20th, இன்றைய ராசிபலன்

By: Updated: July 20, 2020, 12:30:08 AM

Today Rasi Palan, 20th July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 20th July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 20, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

பணம் சம்பந்தமான கவலைகள் மனதை வருத்தும். மாலை நேரத்தில் முன்னேற்றம் குறித்த தகவல் வரும். புதுப்புது ஐடியாக்களால் மற்றவர்கள் பாராட்டுவர். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து புதியதாக வாழ துவங்குவீர்கள். ரகசியங்களை பாதுகாப்பீர்கள். மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மற்றவர்களின் மனமறிந்து நடப்பீர்கள். செயல்களில் புது உத்வேகம் நிறைந்திருக்கும். கனவுகளை நனவாக்கும் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். கற்பனைக்குதிரையை தட்டிவிடுவீர்கள். பொதுநிகழ்ச்சிகளை தவிர்ப்பீர்கள். காலம் கனிந்து வந்தால் எதுவும் தானாகவே நடக்கும் என்பதை உணர்வீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மற்றவர்களால் கட்டாயப்படுத்தி ஒரு செயலை விரும்பாமல் செய்ய நேரிடும். பணியிடங்களில் சக பணியாளர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். அடித்து பழகுவதை அணைத்து பழகுவதால் பயன் அதிகம் என்பதை உணர்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

புதிய இடங்களுக்கு பயணம் செல்ல திட்டம் தீட்டுவீர்கள். புதிய விவகாரங்களுக்கு தலைமையேற்பீர்கள். புதுப்புது நண்பர்களின் நட்பால் மனம் மகிழ்வீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கணவன் – மனைவி இடையே பிரச்சினைகள் உருவாகும். விட்டுக்கொடுத்து செல்வதனால் மட்டுமே உறவு நீடிக்கும் என்பதை உணர்வீர்கள். நிதி விவகாரங்களில் அதிக கவனம் அவசியம். நண்பர்கள் வாங்கிய கடனை திருப்பி அளிப்பர்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மற்றவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. அவர்களின் குணமறிந்து நடப்பதனால் எண்ணிய காரியங்கள் எளிதாக நிறைவேறும். நிதி விவகாரங்களில் திருப்தி நிலவும். முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்திவைக்கவும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நிதி, வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்வீர்கள். நிபுணர்களின் அறிவுரைகளை கேட்க முயல்வீர்கள். மற்றவர்கள் உங்களை தவறான பாதைக்கு வழிநடத்தும் அபாயம் இருப்பதால் கவனம் அவசியம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வேலைப்பளு அதிகரிக்கும். உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிகம் உணர்ச்சிவசப்பட வாய்ப்பு இருப்பதால் மனஅமைதி அவசியம். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். திட்டங்கள் செயல்திட்டங்களாக மாறும். புதிய விவகாரங்களுக்கு தலைமையேற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மனக்குழப்பம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படுவதால் உறவு அறுபடுமே தவிர நிலைக்காது என்பதை மறக்கவேண்டாம். மற்றவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 20th july

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X