மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்கள் நேர்மையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். உங்களை பெரியளவில் குழப்ப உங்களைச் சுற்றியிருப்பவர்களே காத்திருப்பார்கள். மிகவும் உஷாராக இருக்க வேண்டிய தருணம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்க்கையில் இப்போது முக்கியமாகிறது. இன்று சில சவாலான பணிகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள். ஆனால், முடிவில் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நிதிநிலைமை மோசமாக இருக்கும். எவ்வளவு விழிப்பாக இருந்தாலும், கையை விட்டு பணம் கரைவதை உங்களால் தடுக்க முடியாது. உடல்நிலையில் அக்கறை வேண்டும். அமைதியுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
சில எதிர்பாராத திருப்பங்கள் உங்கள் வாழ்வை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் சொல்லும். அது உங்கள் தினத்தை மேலும் ஒளிமயமாக்கும். தேவையில்லாத சில விஷயங்கள் உங்களை விட்டு அதுவாகவே அகலும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
இன்று கடினமான நாள். கடினமான வாய்ப்புகள் உங்களை மெருகேற்றும். ஆனால், அந்த கடினமான வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதில் தான் உங்களிடம் சிக்கல். நிம்மதி இல்லாவிட்டாலும் துன்பம் இருக்காது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மீண்டும் சிறப்பாக செயல்படத் துவங்குவீர்கள். உங்களது பணியைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பார்கள். ஆனால், எதற்காக உழைக்கிறோம் எனபதை மனதில் ஓட்டிப்பார்த்தல் அவசியம். கிரக நிலைகள் உங்களுக்கு ஓரளவிற்கு சாதகமான பலனைத் தரும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
மற்றவர்களின் கையில் உங்கள் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டாம். முடிவுகளை சுயமாக எடுக்கப் பழகுங்கள். ஆதாயம் குறைவாக இருந்தாலும், நிதி நெருக்கடி இருக்காது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிடுவீர்கள். அதில், உங்கள் சுமைகளை மறந்து போவீர்கள். வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டு சுற்றி இருப்பவர்களை மகிழ்விப்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பொறுப்பில் உள்ள பணிகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப்போடாமல் உடனே முடிக்க முயற்சி செய்யுங்கள். இது உங்களது நிதிநிலைமையை சரி செய்ய உதவும். இல்லையெனில், வீண் சங்கடங்கள் வந்து சேரும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வெற்றி உங்களை சூழும் நாள். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பணவரவு இருக்கும். பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்துவீர்கள். கிரக நிலைகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளி வீச காத்திருக்கிறது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
நீங்கள் பணி செய்யும் இடங்களில், உங்களை தொந்தரவு செய்யும், உங்களை எரிச்சல் அடையச் செய்யும் நபர்களை சந்திக்க நேரிடும். அதனை தவிர்க்க முயலுங்கள். முயன்றால், விலகிச் செல்லுங்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
சில சிக்கல்கள் குறுக்கிட்டாலும், பாதிப்பு பெரிதாக இருக்காது. பலவிதமான தொல்லைகள் உங்களின் நிம்மதியை கேள்விக்குறியாக்கலாம். ஆனால், கிரக அமைப்பு உங்களை பாதுகாக்கிறது. கடவுள் வழிபாடு அவசியம்.