Today Rasi Palan, 20th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 20th March 2020: இன்றைய ராசி பலன், மார்ச் 20, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
Advertisment
Advertisements
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தொழில், சட்ட விவகாரங்களில் அதிக கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. உரிமைக்காக குரல் கொடுப்பீர்கள். நீண்ட தொலைவு பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்ற பாதையில் வீறுநடை போடுவீர்கள். நீண்டகாலமாக மனதை உறுத்திவந்த பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். நிதிவிவகாரங்களில் முன்னேற்றமான நிலை நிலவும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
மற்றவர்கள் செய்ய தயங்கும் செயலை அனயாசமாக செய்து முடிப்பீர்கள். முக்கிய நிகழ்ச்சி ஒன்றிற்கு தலைமை ஏற்பீர்கள். வார்த்தை பிரயோகத்தில் கவனம் அவசியம். மகிழ்ச்சியான நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பணிச்சுமை அதிகரிக்கும். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்பதை உணர்வீர்கள். முக்கிய விவகாரங்களில் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
நிதிவிவகாரங்களில் திருப்தி நிலவும். கடந்த இரண்டு வாரகாலமாக தடைபட்டு வந்த காரியங்களில் தீர்வு கிடைக்கப்பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
குடும்ப உறுப்பினர்களால் பாராட்டப்படுவீர்கள். யார் என்ன சொன்னாலும், முடிவு உங்களுடையதாக இருக்கும். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
சிறுதொலைவு பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய இடம், புதிய மனிதர்களால் புத்துணர்வு பெறுவீர்கள். பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
திறமைகள் வெளிப்படும் நாள். அங்கீகாரம் கிடைக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சிறப்பான நாள். எதிர்கால வாழ்க்கைக்கா திட்டம் தீட்டுவீர்கள். அனுபவ அறிவால், எடுத்த காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
எதையும் அரைகுறையாக புரிந்துகொள்வதை தவிர்த்தல் நல்லது. விதண்டாவாதம் செய்பவர்களிடமிருந்து விலகுவது நல்லது. பிறரால் தொந்தரவு ஏற்படும் என்பதால், கவனம்
நட்பா அல்லது வாழ்க்கையா என்ற எண்ணம் மேலோங்கும். அசாத்திய நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மற்றவர்களின் அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். சிறப்பான நாள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil