Rasi Palan 20th May: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 20th May Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 20th May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 20th May 2019 : இன்றைய ராசி பலன், மே 20, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சவாலான பணிகளை ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து செல்வீர்கள். சாதனைகள் உங்கள் பக்கம் வீசக் காத்திருக்கிறது. ஆனால், சோம்பல் உங்கள் வெற்றியை பெரியளவில் தள்ளிப்படுகிறது. நிச்சயம் அது உங்களுக்கு பின்னடைவு கொடுக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்கள் மேலதிகாரிகளிடம் மீதிருந்த மனக்கசப்பு நீங்கும். முடிவுகளை எடுப்பதில் வல்லுநர்களாகிய நீங்கள், இப்போதும் அசராமல் வெற்றிகளை குவிப்பீர்கள். உங்கள் மீதான மதிப்பீடுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்கள் கார்டை சரியாக பயன்படுத்தி விளையாடுங்கள். கைக்கு அருகில் வரும் வெற்றியை தவற விடாதீர்கள். நண்பர்களின் ஆலோசனை நன்மை பயக்கும். ஆனால், இறுதி முடிவு உங்களுடையதாக இருக்கட்டும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்கள் பொழுதை போக்க வேண்டிய நாள் இது. கேட்க சற்று வித்தியாசமாக இருக்கலாம். நீங்கள் பணியில் இருந்தாலும், இன்றைய நாள் உங்களை மகிழ்வுடனும், தித்திப்புடனும் வைத்திருக்கும். இருந்தாலும், கடவுள் வழிபாட்டை மறந்துவிட வேண்டாம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கடினமான தருணமாக இருந்தாலும், வைத்து செய்வீர்கள். காலம் கடந்த சில யோசனைகளை முன்னெடுத்து செல்ல முயற்சி செய்வீர்கள். அதன் பலம் என்னவென்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டிய நாள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பிஸியாக இருப்பது போன்றே தோற்றமளிப்பீர்கள். ஆனால், உங்களே நீங்கள் ஏமாற்றிக் கொள்வது உண்மை தானே! தெளிவான முடிவுகளை எடுப்பதில் மெகா சொதப்பல் செய்யும் நீங்கள், தவறுகளை திருத்திக் கொள்ள முன்வருவதில்லை.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

அனைத்திலும் வளத்துடன் காணப்படும் நீங்கள், உடல் நலத்தில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சனி பகவானை வேண்டிக் கொண்டு பணிகளை துவக்குங்கள். தலையாய கடமையை முடிக்க ஆர்வம் காட்டுங்கள். மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

தனிமையை விரும்பும் விருச்சிக ராசிகாரர்களே, இது மிகவும் முக்கியமான காலக்கட்டம். அனுகூலமான விஷயங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் வருமே தவிர, மகிழ்ச்சியை குத்தகைக்கு எடுத்து வைத்துக் கொள்ள நினைத்தால் வேலைக்கு ஆகாது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

குடும்பத்தினரிடம் உங்களுக்கு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அடுத்து வரும் நாட்கள் உங்கள் முன்னேற்றத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இருப்பினும், பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களது சில சுயநல சிந்தனைகளால் தேவையில்லாத பேச்சுக்களை கேட்க வேண்டியிருக்கும். தவறான பழக்கவழக்கம் உங்களுக்கு வீழ்ச்சியாக அமையலாம். கிரக மாற்றங்களின் தன்மைக்கு ஏற்ப உங்கள் வெற்றி தீர்மானிக்கப்படும். மிகவும் சுமாரான நாள் இன்று.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சமூகம் என்ன நினைக்கும் என்று கவலைப்பட்டு முடங்கிக் கிடக்க வேண்டாம். சிறிய சிறிய சறுக்கல்கள் உங்களுக்கு பாடமே தவிர, தோல்வி கிடையாது. எழுந்து ஓடுங்கள். தனியாத் தாகத்தை ஒரு சில முயற்சிகளில் தணித்துக் கொள்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

எண்ணங்கள் உங்கள் வாழ்வை மேம்படுத்தும். நிதானமாக செயல்படுவது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். கல்வியால் உங்கள் தரம் உயரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும். அது நல்ல மாற்றமாக இருக்கும்.

Get all the Latest Tamil News and Horoscope in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Rasi Palan by following us on Twitter and Facebook

×Close
×Close