Advertisment

Rasi Palan 20th May 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan May 20th, இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 20th May 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 20th May 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 20th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 20th May 2020: இன்றைய ராசி பலன், மே 20, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று அருமையான நாள். வெற்றி உங்களைத் தேடி  வரும். ஆனால், கையோடு சில ஆபத்துகளையும் கொண்டு வரும். அவற்றை கண்டு அஞ்ச தேவையில்லை. சில நிமிடங்கள் உங்களுக்கானதாக ஒதுக்கப்பட்டிருக்கும். முடிந்தால் அதில் சாதித்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு தள்ளிப்போனதே என்று வருத்தம்  வேண்டாம். அடுத்தடுத்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மன அழுத்தம் தான் உங்களது எதிரி. சரியான நபர்களின் ஆலோசனைகளோடு அதை தூர எறியுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சளித்தொல்லை நீங்கும். அடம் பிடிப்பதை குறைத்துக் கொண்டால் நல்லது. ஏனெனில், உங்களது முன்னேற்றம் சில, உங்களது இந்த குணத்தால் தடைபடும். கடமைகளை ஆர்ப்பாட்டத்துடன் செய்யாமல் ஆத்மார்த்தத்துடன் செய்யப் பழகுங்கள், வெற்றி நிச்சயம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

சில சறுக்கல்கள் இருந்தாலும் வெற்றிநடை போடுவீர்கள். தடுமாற்றம் உங்களை படியேற்றும். பணவரவு சிறப்பாக இருக்கும். நண்பர்களின் உதவி கைக்கொடுக்கும். பெற்றோர்களின் அன்பைப் பெறுவீர்கள். மனைவியின் காதலை பெறுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

இறைவன் வழிபாடு உங்களை மேலோங்க வைக்கும். காகத்திற்கு சாப்பாடு வைத்துவிட்டு இன்று சாப்பிடுங்கள். மூதாதையர்களின் முழு ஆசீர்வாதம் கிடைக்கும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வேண்டாம் என்றால், இன்னல்கள் வந்து சேரும் நாள். குழந்தையில் ஆரோக்யத்தில் அதிக அக்கறை தேவை. வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மௌனமே இன்று உங்களை தற்காக்கும் ஆயுதமாகும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

குடும்ப உறவில் மாற்றம் உண்டாகும். விட்டு விலகியோர் உங்களை புரிந்து கொண்டு அவர்களாகவே மீண்டும் தொடர்பு கொள்வார்கள். யாரையும் குறைவாக எடைப் போட வேண்டாம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

போராட்ட குணம் உங்களுக்கு இயற்கையில் இருக்கும். உங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அது வந்து சேருவது கொஞ்சம் தாமதமாகலாம். கோயிலுக்கு சென்றால், பூசாரியின் காலில் விழுந்து வணங்குங்கள். பூர்வ பாவங்கள் கழியும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

குழந்தை பாக்கியம் உண்டாகும். யாருக்காகவும், எதற்காகவும் அஞ்ச வேண்டாம். உண்மை உங்கள் பக்கமே. அனாவசிய பேச்சுகளை தவிர்த்து செயலில் கவனமாக இருங்கள். வெற்றி உறுதி.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இன்று கோவில் சென்று சம்பிரதாய முறைப் படி வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். இதன் மூலம் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடவும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இன்று தேவையற்ற மனக் குழப்பங்கள் சுமையாக இருக்கும். நம்பிக்கையுடன் இருந்தால் நன்மை காணலாம். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது.பண இழப்பின் காரணமாக ஏமாற்றம் நிறைந்து காணப்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இன்று நீங்கள் அதிகப் பணியில் மூழ்கி இருப்பீர்கள். புதிதாக ஒன்றை அடைவதில் உறுதியாக இருப்பீர்கள். கடினமாக உழைப்பதன் மூலம் வெற்றி காண்பீர்கள்.பணியிடச் சூழல் சிறந்த செயல்திறன் ஆற்ற சாதகமாக இருக்கும். உங்கள் வேலைத் தரம் உங்களின் திறமையை பறைசாற்றும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment