Advertisment

Rasi Palan 20th October 2020: இன்றைய ராசிபலன்

உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்

author-image
WebDesk
New Update
Today rasi palan, rasi palan , இன்றைய ராசிபலன்

Rasi Palan 20th October 2020: இன்றைய ராசிபலன்:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 20th October 2020: இன்றைய ராசி பலன், அக்டோபர் 20, 2020: 

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :  இன்று சந்திரன் துடிப்பான மனநிலையில் இருக்கிறார். எனவே, உங்கள் உறவுகளில் பெரிய மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்.  ஒரு அழகான காதலை உணர்வீர்கள். சரியான நபரை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தவும்!

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :  நட்சத்திரங்கள் சாதகமான   போக்கை உருவாக்கிக் கொடுக்கும். மகிழ்ச்சியாக இருங்கள். நேர்மறையான செயல்பாடு அதிக பலனைத் தரும். உங்களுடன் பணிபுரியும் பணியாளர்களும், மூத்த அதிகாரிகளும் உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) :  வீட்டுப் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்த தொடங்குவீர்கள். அதில், சில வெற்றியையும் காண தொடங்குவீர்கள். உங்கள் சுமை பெருமளவு அதிகரிக்கக்கூடும்.  எவ்வாறாயினும், உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.  கடின உழைப்பு வெற்றியைத் தரும் என்பது  உங்களுக்குத் தெரியாதா என்ன?

கடகம் (ஜூன் 22  – ஜூலை  23) :  சூரியன் மற்ற கிரகங்களோடு மகிழ்ச்சிகரமான முறையில் ஒன்றிணைகிறது. ஆழமான காதல் உங்கள் ஆத்மாவை வழிநடத்தும். உங்கள் நெருங்கிய நண்பர்களும்  இதேபோன்ற மனநிலையில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :  உங்கள் நண்பர்கள்  உங்களுடனான உறவுகளை வலுப்படுத்தும்  உறுதிப்பாட்டை, வெறும் மேலோட்டமாகத் தான் புரிந்து கொண்டு இருக்கின்றீர்கள். நெருக்கமான உறவுகள் நீட்டித்திருக்க மீண்டுமொரு முறை முயற்சி செய்யுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24  – செப்டம்பர் 23) : வழக்கமான செயல்பாடுகளில் இருந்து ஒரு முழுமையான இடைவெளி உங்களுக்கு தேவைப்படுகிறது. தவிர்க்க முடியாத கடமைகளை, மிகவும் கவனமாக  கையாள வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :  உங்கள் நீண்டகால எதிர்பார்ப்புக்கு பாதிப்பு விளைவிக்கக் கூடிய  சில மறைமுகமுன்னேற்றங்கள் மீது கவனமாக இருங்கள்.  உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்த புரிதல் முதலில் உங்களுக்கு வரவேண்டும். இன்று நீங்கள் கவனிக்க மறந்த சம்பவங்கள், அடுத்த ஆறு மாதங்களில் நம்பமுடியாத விளைவுகளை ஏற்படுத்தும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :  பல வண்ணமயமான தருணங்கள் காத்துக் கிடக்கின்றன. . இருப்பினும், சில முக்கிய கேள்விகளுக்கு, தீவிரமான, பக்குவமான பதில் தேவைப்படுகிறது. விரைவாக சாத்திக்க நினைப்பது இயல்பானது தான். ஆனால், நிதானம் அதிகப்படியான வெற்றியைத் தரும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20) :  ஆழ்மனதில் ஓடிக்கொண்டிருக்கும் நீண்டகால கேள்விகளை இன்று  கருத்தில் கொள்ளுங்கள். இன்றைய சம்பவங்கள், உங்களின் சொந்த வாழ்கையையும் தாண்டிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் முன்பின் அறிமுகம் இல்லாதவர் கூட உங்கள் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :  நெருங்கிய நண்பர்கள் கூட உங்களை விலகிச் செல்லலாம்.  உங்களின்  எதிர்கால  பயணம் எளிமையாக இருக்கும். நிதிக் கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த தொடங்குகள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :  நிதி என்றாலும், அலை நிச்சயமாக உங்கள் திசையில் பாய்கிறது சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை, முக்கியமாக நீங்கள் ஒரு ஆடம்பரமான கட்டத்தை அடையப்போகிறீர்கள். சிறிய முன்னெச்சரிக்கைகள் உதவும்: உதிரிப் பணத்தை கிடைக்கச் செய்யுங்கள், நீங்கள் மெல்லக்கூடியதை விட அதிகமாக கடிக்க வேண்டாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :  சில மனக்கசப்புகள் இருந்தாலும்,நண்பர்களுடன் உற்சாகமான மனநிலையோடு கலந்துரையாடுவீர்கள் . தற்போதைய  கடினமான காலகட்டம் முடிந்துவிட்டது, நீங்கள், எதிர்பார்த்ததை விட அதிக நன்மைகள் வந்து சேரும். பெருமூச்சுக்கு சொந்தக்காரர்கள் நீங்கள்.....

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment