Rasi Palan 21st August: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 21st August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan 21st August: இன்றைய ராசிபலன்
Rasi Palan 21st August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 21st August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 21st August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 21, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சந்திரன் உங்களுக்காக தெளிவான பாதையை இன்று வகுத்துக் கொடுக்கும். அதில் சறுக்கி விழாமல் பயணிப்பது உங்கள் பொறுப்பு. திருமணம் கைக்கூடும் நேரம் வந்திருக்கிறது. குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நண்பர்களுடனும், உறவினர்களுடன் இனிமையான சண்டையை தொடர்ந்து கொண்டே இருப்பீர்கள். யாரும் முகத்திற்கு நேராக உண்மையை பேசுபவர்கள் இல்லை. ஏன், நீங்கள் கூடத்தான். இருப்பினும், தொடர்ந்து சில உதவிகளை நண்பர்களிடம் இருந்து பெறுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சந்திரன் உங்களுக்கான தொடர் வாய்ப்புகளை வழங்கி வந்தது. ஆனால், நீங்கள் தான அதை பயன்படுத்த தவறிவிட்டீர்கள். உங்கள் முயற்சிகளை வெற்றியாக்க நீங்கள் மேலும் கடின உழைப்பை பதிவு செய்திட வேண்டும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்கள் கடினமான தருணங்களை பகிர்ந்து கொள்பவர்கள் யார் என்பதை பகுத்தறிய பழகுங்கள். செல்வம் உங்களை நோக்கி வரும். சேமிப்பும் பழக்கமும் இப்போது உங்களிடம் அதிகரிக்கத் தொடங்குகிறது. நிம்மதியான நாள் இன்று.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

இன்று மகிழ்ச்சி காணப்படும். புதிய தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெளியிடங்கள் மற்றும் விருந்துகளுக்கு செல்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கடின உழைப்பும், குழப்பமும் சரியான விகிதத்தில் கலந்திருக்கும். சந்திரன் உங்களது மனவலுவை அதிகரிக்கும். சந்திரன் ஆதிக்கம் தருவதால், நீங்கள் தவறாக ஏதும் செய்துவிடாமல் அது பாதுகாக்கும். ஆனால் உண்மைகளை விட நீங்கள் உணர்ச்சிகளால் தூண்டப்படலாம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இன்று பணத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிகள் செய்யலாம். உடற்பயிற்சி மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருங்கள். பிரார்த்தனை சிறந்த பலன் தரும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

இன்று பணிகளை திறமையுடன் கையாளும் பொறுமை உங்களிடம் தென்படும். சந்திரனின் ஆதிக்கமே அதற்கு காரணம். இதனால் தவறுகளை புறக்கணிக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்களிடம் காணப்படும் ஈகோ மனப்பான்மை உங்கள் துணையுடனான உறவை பாதிக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை தக்க வைக்க உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். ளி இருமல் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். திறமையுடன் பணியாற்றுவீர்கள். இவையனைத்தும் உங்கள் சக பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும். உங்களின் நேர்மையான செயல்திறன் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று சேமிக்க முடியும். அதனால் மிகுந்த திருப்தி உண்டாகும். இன்று முழு ஆரோக்கியம் காணப்படும். உங்களிடம் இன்று உறுதி காணப்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் துணையிடம் சண்டை போட்டுவிட்டு எங்கே போகிவிடப் போகிறீர்கள்? கடைசியில் அங்கு தான் போயாகணும். எதார்த்தத்தை புரிந்து கொள்வதே உங்கள் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும். சுயநல எண்ணம் விலகும்.

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 21st august 2019 rasi palan today

Next Story
Rasi Palan 18th October 2018: அமைதியாக வேலையை மட்டும் பாருங்கள்; வெற்றி நிச்சயம்Daily Rasi Palan Tamil: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com