மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தன்னம்பிக்கையை ஒரு போதும் இழக்கமாட்டீர்கள். உங்களின் பலம் அதுவே, தற்போது சிறிது காலத்திற்கு இந்த சறுக்கல் இருக்கும். மீண்டும் புத்துயிர் பெற்று விரைந்து முன்னேறுவீர்கள். சுமாரான நாள் இது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
செயலில் கவனமாக இருந்தாலும், சில அவமானங்களையும், தோல்விகளையும் சந்திக்க நேரிடும்.. கவனக்குறைவு உங்கள் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதை வீழ்த்தி செய்துவிட்டால், மிகப்பெரிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். அதில் உங்களால் ஜொலிக்க முடியும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்கள் செயல்பாடுக்கு பாராட்டு கிடைக்கும். ஆனால், அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். அதேசமயம், உங்கள் பொறுப்பும், கடமையும் மேலும் அதிகரித்திருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பிரச்சனைகளை தகர்த்தெறியுங்கள். அதற்கான ஆற்றல் உங்களிடம் உள்ளது. சுற்றி இருப்பவர்களால் சிக்கல் இருக்காது.ஆனாலும், எச்சரிக்கை தேவை.வெற்றி கிடைக்காவிட்டாலும் தோல்வி உங்களை பாதிக்காது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மேலே எழும்பி முன்னுக்கு வர வேண்டுமே என்று நினைத்தாலும், உங்களுக்கு எதிராக சில அலைகள் இருக்கும். உங்கள் நண்பர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நிதிநிலைமை இன்று எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பணியிடத்தில் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்வீர்கள். அதில் ஓரளவு வெற்றியும் காண்பீர்கள். பண தேவைக்காக, உங்களது சிந்தனைகள் உங்களை விட ஸ்மார்ட்டாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
குடும்பத்தினருக்கு சற்று முக்கியத்துவம் கொடுங்கள். எதுவும் கெட்டுப் போய்விடாது. மனைவியுடன் நெருக்கம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். அவற்றின் மூலம் லாபகரமான பலன் கிடைக்கும். நீங்கள் இன்று நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உங்கள் இலக்குகளை பாதிக்கும் விஷயங்கள் உங்கள் அருகிலேயே இருக்கும். அது என்ன என்பதை நீங்களே கண்டறிய வேண்டும். நிதிநிலைமை அபாரமாக இருக்கும். கூடுதல் செலவுகள் உங்களை பாதிக்காவிட்டாலும், சேமிப்பு என்பது முக்கியம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கடவுள் வழிபாடு உங்கள் ராசிக்காரர்களுக்கு இப்போது மிக மிக அவசியமாகிறது. நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் காலை விநாயகரை வணங்கிவிட்டு செல்ல வேண்டும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சுமாரான நாளாக இருந்தாலும், இந்த வழிபாடு உங்கள் பக்கம் தென்றல் வீசச் செய்யும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உடல் நலத்தில் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்களின் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். மேம்போக்கான சிந்தனைகளை மாற்றிக் கொண்டால் உங்களுக்கு நல்லது. உங்களுக்கும் திடீர் வெளியூர் பயணங்கள் அமைய வாய்ப்பிருக்கிறது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
அனுபவமே உங்களுக்கு பாடம். அதை நியாயமாக கற்றுக் கொள்ள விரும்புவீர்கள். சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் ரியாக்ட் செய்ய வேண்டாம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
புரியாமல் இருக்கும் விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதனால் உங்களுக்கு வீழ்ச்சி ஏற்படாது. கனவுலகில் இருந்து வெளியேற வேண்டியது அவசியம். பிரச்சனைகள் இருந்தாலும் நிம்மதியான நாள்.