Advertisment

Rasi Palan 22nd May: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 22nd May Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan july 16th, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 16th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 22nd May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 22nd May 2019 : இன்றைய ராசி பலன், மே 22, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சறுக்கினாலும் மீண்டு எழுந்து வருவீர்கள். இருப்பினும், அதிக படிப்பினை உங்களுக்கு அவசியம். தோல்விகளில் இருந்தே பாடத்தை கற்றுக் கொண்டு வலிமையாக திரும்புவீர்கள். உங்கள் எதிரி உங்களது சோம்பேறித் தனமே.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அது உங்கள் தனிமையை விரிவுப்படுத்திவிடும். தவறாமல் உங்கள் பக்க நியாயத்தை பேசிவிடுங்கள். இல்லையெனில், பாதிக்கப்படப்போவது நீங்கள் மட்டும் இல்லை, உங்களைச் சுற்றியிருப்பவர்களும் கூட.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

வெற்றி எளிதில் மடியில் வந்து உட்கார்ந்துவிடாது. அதற்காக நிறைய உழைக்க வேண்டும். நிறைய தியாகங்களையும் செய்ய வேண்டும்.ஆனால், டிவி ரிமோட்டை தியாகம் செய்வதில் கூட யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள். மாற்றம் தேவை.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்கள் வீட்டின் அமைப்புகளை மறு ஆக்கம் செய்வார்கள். பண வரவு இருந்தாலும், அதைத் தாண்டிய செலவுகள் இருக்கும். மற்றபடி, உங்கள் வெற்றியை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. நிலையான கொள்கை உங்கள் முன்னேற்றத்திற்கு ஏணியாக இருக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மாற்றம் ஒன்றே மாறாதது. இதைப் புரிந்து கொள்ளாத வரை உங்கள் பார்வை மாறாது. கனவுலகில் இருந்து விடுபட வேண்டிய நிலையில் உள்ளீர்கள். எதற்காக உழைக்கிறோம் என்றே தெரியாமல் உழைப்பது உங்கள் மேலோட்டமான மனநிலையையே எதிரொலிக்கிறது. இதிலிருந்து விழித்துக் கொள்ளுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பறந்த மனப்பான்மையுடன் சிந்திப்பீர்கள். அது உங்களை அடுத்த தளத்திற்கு கொண்டுச் செல்லும். அவசரமாக எடுக்கும் முடிவுகள் உங்களின் வெற்றியை பாதிக்கலாம். அதில் நெகட்டிவிட்டி அதிகம் கலந்திருக்கிறது. சில் சுவாரஸ்ய செய்திகள் வரும் வாரத்தில் உங்களை அலங்கரிக்க காத்திருக்கிறது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்கள் செயல்பாடுகள் உங்கள் மீதான மதிப்பை குறைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சில சங்கடங்களை அனுபவிக்க நேரிடும். உங்கள் வாதத்தை இப்போது யாரும் ஏற்க தயாராக இல்லை. ஆனால், வாதம் முக்கியமானதாக இருக்கும். சுமாரான நாள் இன்று.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மகிழ்ச்சியை சில விஷயங்களை கடந்து செல்லும் நீங்கள், கடினமான முடிவுகளையும் கடந்து செல்ல பழக வேண்டும். வலியச் சென்று வேறு பொறுப்புகளை ஏற்க வேண்டும். அதனால், சில நண்பர்களை இழக்க நேரிடும். தெளிவாக முடிவெடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மீண்டும் மீண்டும் சொல்கிறோம், கடவுள் வழிபாடு உங்கள் ராசிக்கு அவசியம். உங்கள் ராசிக்காரர்களுக்கு அவசியம். கணிசமான வேதனைகளை சமீக காலங்களாக அனுபவித்து வருகிறீர்கள். அதனை முற்றிலும் போக்க, உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள் போதும். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உடல் நலத்தில் அக்கறை தேவை. குடும்பத்தில் அன்பை விதைக்க முயற்சி செய்யுங்கள். காதல் கைகூடும். வெளிநாடுகளில் வேலைக்கு ஏற்பாடு செய்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இன்று பலன்களில் ஏற்றத்தாழ்வு காணப்படும். செயல்கள் சுமுகமாக நடைபெற அனுசரித்து நடக்க வேண்டும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. பணத்தை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். உங்களது சமீப கால தொடர் தோல்விகளை தவிர்க்க, சிவபெருமான் வழிபாடு அவசியம். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதில் தாமதம் இருக்கும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment