Today Rasi Palan, 21st October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 21st October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 21, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு கிடைக்கும். உங்களை விரும்புபவர்களை நேசிக்கப் பழகுங்கள். உங்களை வெறுப்பவர்களையும் நேசிக்கப் பழகுங்கள். பல மாற்றங்கள் உண்டாவதை நீங்கள் உணர்வீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கடுமையான சூழ்நிலைகளை கவனமுடன் கையாளுங்கள். எதிர்கால தேவையை நிவர்த்தி செய்ய நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அப்படி நடந்து கொள்ளும் பட்சத்தில் வெற்றி உங்களை தேடி வரும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நிதிநிலை நேற்றைவிட, இன்று சற்று மோலோங்கி இருக்கும். உங்கள் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வீர்கள். நண்பர்களின் உதவியால் பலன்கள் கிடைக்கும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
அடுத்தவர்கள் உங்களைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள் என நினைத்து வருத்தப்பட வேண்டாம். நீங்கள் அவர்களை விட புத்திசாலிகள் என்பதை மறக்க வேண்டாம். நிதிநிலைமை ஏற்றமுடன் இருக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பணம் பத்தும் செய்யும். உங்கள் விஷயத்தில் பதினொன்னும் செய்யும். எதிரிகளை கவனமாக கையாளுங்கள். அங்கீகாரம் கிடைக்க தாமதமானாலும், இறுதியில் வெற்றி கிடைப்பது உறுதி.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்கள் கனவுகளை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளுங்கள். ஆனால், தவறான பாதையை தூக்கி எறியுங்கள். கடினமான தருணங்களில் இருந்து உங்கள் தலையை சற்று மறைத்தே வையுங்கள். அமைதியாக, நிதானமாக பணியை மேற்கொள்ளுங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. பணி நிமித்தம் வெளிநாடு செல்லும் அமைப்பு உள்ளது. கற்பனையில் மிதப்பதை குறைத்துக் கொண்டால் பலன் தரும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உங்கள் திட்டங்களில் உங்களுடன் பணி செய்பவர்களையும், மற்றவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். தலைமைப் பண்பு இயற்கையாக உங்களுக்கு உண்டு. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயலுங்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் உடல்நிலை மிகுந்த கவனம் தேவை. இப்போதுள்ள அமைப்புகளின் படி, எதிர்காற்றை அதிகம் சந்திக்காதீர்கள். அது உங்கள் உடல்நிலைக்கு ஆகாது. குழந்தையை முடிந்தவரை மற்ற கைகளுக்கு கொடுக்காதீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
சில திடீர் சந்திப்புகள், உங்களின் வாழ்க்கையை மாற்றும். உங்கள் திட்டங்களை மாற்றும். நீங்கள் எடுக்கும் முடிவே உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
முற்றிலும் புதிய பாதையில் பயனிப்பீர்கள். அது உங்களுக்கு மன நிறைவைத் தரும். வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி வந்து சேரும் நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
முன்னெச்சரிக்கையாக இருந்து பணிகளை முடியுங்கள். மற்றவர்களின் சிரிப்பை புறக்கணிக்காதீர்கள். அன்புடன் பழகுங்கள். சிறப்பான முடிவுகளை எடுப்பதில் குழப்பம் இருக்காது.