Rasi Palan 21st September 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 21st september 2020 rasi palan today - இன்றைய ராசிபலன்

By: September 21, 2020, 7:02:38 AM

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 21st September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 21, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

திங்கள் எனக்கு பிடிக்கவில்லை என்று ஒரு கோரஸ் பாடல் உள்ளது. திங்கள் எப்படி எதிர்மறையான நாளாகும். திங்கள்கிழமை ஒரு சிறந்தநாள். திங்கள்கிழமை சந்திரனால் ஆளப்படுகிறது. கவிதையின் கிரகம் சந்திரன். உணர்வுகளின் உயர்வும் தாழ்வும் கொண்ட கிரகம். அது வாழ்க்கையின் வளமான ஒரு பகுதியாக இருக்கும். அது வாரத்திற்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கிறது.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

வாரத்தின் தொடக்கத்தில் பணம் குறித்த கேள்விகள் இருக்கும். இந்த நேரத்தில் உங்களால் என்ன வாங்க முடியும், என்ன வாங்க முடியாது என்பது முக்கிய பிரச்னையாக இருக்கும். இன்று எல்லாம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனென்றால், இன்னும் மாற்றங்கள் காத்திருக்கின்றன.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உற்சாகமான சந்திரனின் நிலை உங்களுக்கு உணர்ச்சி அலைகளை எழுப்பும். தெய்வத்தின் அருள் நீங்கள் விரும்பியதைவிட கொஞ்சம் குறைவாக இருக்கலாம். ஆனால், உங்களுடைய வழக்கமான எந்த மாற்றங்களையும் உங்களை பிரதிபலிப்பதற்காக ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நீங்கள் முதலில் உங்களுடைய சிந்தனைகளை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது குறித்து கவலைப்படலாம். இரண்டாவது, உங்களுடைய திட்டங்களை மற்றவர்கள் தெரிந்துகொள்வதை தடுப்பதற்கு கவலைப் படலாம். நம்பகமான நபர்களை விரைவில் உங்களுடைய நம்பிக்கைக்குள் கொண்டுவாருங்கள். நீங்கள் உங்களுடைய வழியை அடைய சிறப்பான வாய்ப்பை பெறுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தொலைநோக்குடன் சிந்தியுங்கள். நீங்கள் உடனடியாக பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் குறித்து கவலைப்படலாம். ஆனால், உங்களிடம் ஒரு நீண்டகால யுக்தி இருந்தால் உங்களுடைய இந்த நாள் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். அது, உங்கள் விவகாரங்களில் உள்ள அடிப்படை வடிவங்களை அடையாளம் காண உதவும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆக. 23)

தற்போது மனதின் எல்லா கேள்விகளும் உங்களுடைய லட்சிய விருப்பத்தைப் பற்றியதாக இருக்கும். இந்த திசையில் நீங்கள் எந்த முயற்சியும் செய்யத் தவறினால், நீங்கள் உங்கள் மீது விரக்தி அடைவீர்கள். இறுதியாக உங்களுடைய முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வீட்டிலும் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீங்கள் குழப்பங்களை சந்திக்க நேரிடும். மாற்றம் உங்களை நிர்பந்திப்பதால் இது வரவேற்கப்பட வேண்டும். நீங்கள் விரும்பும் எந்த அவசியமான முன்னேற்றத்திற்கும் உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும். எல்லோருடனும் நன்மைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நீங்கள் முடிந்தவரை தாராளமாக இருப்பதிலிருந்து இன்னும் நிறையப் அடையலாம். ஆதாயத்திற்காக மட்டும் வாழக்கூடாது என்பது போன்ற வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பணம் பயன்படுத்தப்பட வேண்டும், பதுக்கி வைக்கப்படக் கூடாது என்பதை உணருங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

இது உணர்வுபூர்வமாக மிகவும் சக்திவாய்ந்த காலகட்டம். ஆனால், இது போன்ற தருணங்களில் பல வழிகளில் நீங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான தீவிரம் இருக்கும். இன்றைய கொண்டாட்டத்திற்கான காரணம் பணமாக இருக்கலாம். இன்று என்ன நடக்கிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அதற்காக இன்னும் கொஞ்சம் நேரம் செலவிடலாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

இன்று திறமையான மற்றும் அமைப்பாக்கப்பட்ட ஒரு தொடக்கத்திற்கு செல்லுங்கள். இந்த வார தொடக்கம் வருத்தத்திற்கான நேரம் இல்லை. விரைவில் ஒரு சிறிய புயலான காலம் வரக்கூடும் என்பதால், உங்கள் நலன்களில் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். வீட்டிலுள்ளவர்கள் மீது அக்கறையுடன் இருங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இது உங்களுக்கு எல்லையற்ற இன்பத்திற்கான தருணம் என்று சொல்வது மிகையாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாக உங்கள் தனிப்பட்ட படைப்பாற்றல் மற்றும் சுய வெளிப்பாடுக்கான விருப்பத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்க இது சிறந்த நேரம். உங்களுடைய உற்சாகத்தை யாரும் கடினப்பட்டு தூண்டிவிடவேண்டிய அவசியமில்லை.

கும்பம் (ஜனவரி 31 – பிப்ரவரி 19)

இன்று உங்களுடைய அடிப்படை விஷயங்களுக்கு திரும்புங்கள். உங்களில் சிலருக்கு இன்று வீடு மற்றும் குடும்ப விவகாரங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் நீங்கள் உண்மையில் வேறு எதையும் செய்ய மாட்டீர்கள். வேலையில், ஒரு வசதியான சூழ்நிலையை உருவாக்க உங்களால் முடிந்தவரை முயற்சிக்கவும். அவர்கள் உங்களை நம்ப முடியும் என்பதை சக ஊழியர்களுக்கு தெரிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் திட்டங்களில் நீங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறீர்கள். ஆனால், அவற்றில் எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதில் உறுதியாக இல்லை. பொதுவாக தீர்மானிக்காமல், எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் எப்படி உறுதியாக இருக்க முடியும் என்பது விசித்திரமானது. நீங்கள் உண்மையில் என்ன அடைய முடியும் என்று பார்ப்பது ஒரு பயனுள்ள தொடக்கமாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 21st september

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X