Advertisment

Rasi Palan 21th February 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 21th February 2020

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 21th February 2020

Rasi Palan 21th February 2020

Today Rasi Palan, 21th February 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 21th February 2020: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 21, 2020

இன்றைய நாள்

கும்ப ராசிக்காரர்களுக்கு மிக முக்கிய நாள். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ஏற்படும் தடுமாற்றங்களால் அதிக பாதிப்பு அடைவீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மகிழ்ச்சியான நாள். பிரியமானவர்களுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். நிதி விவகாரங்களில் சாதகமான நிலை நிலவும். கடனுதவிகள் கிடைக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

எதிர்கால வாழ்விற்காக திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான செய்தி, வாயிற்கதவை தட்டும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

முக்கிய முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்த்தல் நலம். உங்களின் வார்த்தைகளை மற்றவர்கள் உதாசீனப்படுத்துவார்கள் என்பதால் அவர்களிடத்தில் இருந்து விலகி இருத்தல் நல்லது. பயணத்திற்கு திட்டமிடுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் நற்பலன்களை பெறுவீர்கள். நட்பு பாராட்டுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். விருந்து விசேஷங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

காதலின் மகத்துவத்தை உணர்வீர்கள். பார்க்கும் எல்லாரையும் நட்பு பாராட்டுவீர்கள். இன்றைய நாள் போலவே எல்லா நாளும் அமைந்துவிடாதா என்று நினைப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

புதுப்புது அனுபவங்களை பெறுவீர்கள். பிரியமானவர்களுடன் அந்தரங்க விஷயங்களை பகிர்வீர்கள். உணவு பழக்கவழக்கங்களில் நிதானம் மேற்கொள்வது நல்லது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மற்றவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரயத்தனம் மேற்கொள்வீர்கள். சவால்களை ஏற்க தயங்கமாட்டீர்கள். விழிப்புடன் இருந்தால் விரயத்தை தவிர்க்கலாம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

தொழில்முறை விவகாரங்களில் அசட்டையை தவிர்த்தல் நலம். மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். பிரியமானவர்கள் தங்களை தவறாக எண்ண வாய்ப்பிருப்பதால் கவனம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

புது சவால்களை ஏற்று அதில் வெற்றியும் பெறுவீர்கள். எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். பொதுநல விஷயங்களில் அதிக அக்கறை செலுத்துவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள். நிதிவிவகாரங்கள், சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. அறிவார்ந்த நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உற்றார் உறவினர்களுடன் இருந்தபோதிலும், தனிமையாக இருப்பதுபோன்ற மனநிலை ஏற்படும். மனசஞ்சலம் அதிகம் ஏற்படும் என்பதால், தனிமையை தவிர்த்தல் நலம். பின்விளைவுகளை அறிந்து செயல்களில் ஈடுபடுவது நல்லது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கற்பனைக்குதிரையை தட்டிவிடுவீர்கள். கனவுகளால் உற்சாகம் பெறுவீர்கள். பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற ரீதியிலேயே உங்களது நடவடிக்கைகள் இருக்கும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment