Today Rasi Palan, 21th January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
Advertisment
Advertisements
Rasi Palan 21th January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 21, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
கற்பனைக்கு எட்டாதவகையில் புதிய நிகழ்வுகளுடன் எதிர்காலம் துவங்கும். ஓய்வுநேரத்தை சுகமாக அனுபவிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
மனசஞ்சலம் ஏற்படும் என்பதால் செய்யும் செயல்களில் முன்எச்சரிக்கை அவசியம். புதிய பொறுப்புகளை ஏற்பதில் அதிக கவனம் வேண்டும். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். விழிப்புடன் இருந்தால், விரயங்களை தவிர்க்கலாம்.
வார்த்தைகளில் நிதானம் காப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எந்த விஷயங்களிலும் சமாதானத்தை செய்துகொள்ள மாட்டீர்கள். ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும் நாள். திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில் தடுமாற்றம் நிகழும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
வெளிவட்டார தொடர்புகள் போதிய பலனளிக்காமல் போகலாம். விழிப்புடன் இருந்து காரியங்களை செயல்படுத்துவது நல்லது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதனால் மற்றவர்களிடமிருந்து கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
வெளிவட்டார தொடர்பு விரிவடையும். இன்றியமையாத விஷயங்களில் முக்கிய முடிவு எடுக்க வேண்டியிருப்பதால், ஒன்றுக்கு பலமுறை அந்த விஷயங்கள் குறித்து பெரியவர்களிடம் கலந்தாலொசிப்பது நல்லது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
ரகசியங்களை பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். தங்களது நலன் விரும்பிகள் அறியாதவகையிலேயே உங்களது சில செயல்பாடுகள் இருக்கும். எதிர்பார்ப்புகளை தவிர்த்தால் ஏமாற்றங்களை தடுக்கலாம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பங்காளிகள் உறுதுணையாக இருப்பர். உங்கள் வார்த்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த விவகாரங்களில் தீர்வு காணப்பெறுவீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
அதிகம் உணர்ச்சிபடும் நாள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். மற்றவர்களினால் அசவுகரியத்தை சந்திப்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
பயணம் செல்வது தொடர்பான எண்ணம் தோன்றும். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
நிதிவிவகாரங்களில் அசவுகரியமான நிலை நிலவுவதால் கவனம் தேவை. விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எதிர்கால வழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள்.