Today Rasi Palan, 21th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 21th March 2020: இன்றைய ராசி பலன், மார்ச் 21, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
Advertisment
Advertisements
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தொழில்முறை விவகாரங்களில் திருப்தி நிலை நிலவும். அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. அதிகம் உணர்ச்சிப்பட வாய்ப்பிருப்பதால், வார்த்தைகளில் நிதானம் காப்பது அவசியம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
வெற்றிகரமான நாள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். இளைய சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
வார்த்தைகளில் நிதானம் காப்பது நல்லது. கிரகங்கள் சாதகமான இடத்தில் இல்லாததால், செய்யாத தவறுகளுக்கு பழி ஏற்க வேண்டியிருக்கும். மன அமைதிக்கு தியானம் செய்வது நல்லது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
மனதில் பட்டவற்றை வெளிப்படையாக பேசுவீர்கள். உங்கள் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்த தயங்கமாட்டீர்கள். எத்தகைய நிலையையும் தயங்காமல் எதிர்கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கசப்பான அனுபவங்களிலிருந்து நிம்மதிப்பெருமூச்சு விடுவீர்கள். மறந்துபோன செயல்களை நினைவுபடுத்தி செயல்படுத்துவீர்கள். தொலைபேசி, கடிதத்தின் வாயிலாக புதிய செய்தி வந்து சேரும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
புதிய செயல்களை துவக்க உகந்த நாள். மனசஞ்சலம் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாது காரியங்களில் உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரியமானவர்களின் நலனுக்காக யோசிப்பீர்கள். நிதிவிவகாரங்களில் திருப்தி நிலை நிலவும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். தவறான எண்ணங்களிலிருந்து விடுபட முயல்வீர்கள். தொழில்முறை இடைஞ்சல்களிலிருந்து விரைவில் விடுபடுவீர்கள். உணவு பழக்கவழக்கங்களில் அதிக கவனம் வேண்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
எது நல்லது எது கெட்டது என்பதை பகுத்தாராய்ந்து ஒவ்வொரு செயல்களையும் செய்வீர்கள். பல நபர்கள் பல்வேறு கருத்துக்களை சொன்னாலும் அதில் எது தனக்கு சரியாக இருக்கும் என்பதை யோசிப்பீர்கள். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
திங்கட்கிழமை என்பதையே மறந்து இருப்பீர்கள். ஆதாயம் வரும் நாள். மற்றவர்கள் சொல்லும் விசயங்களை நன்றாக கேட்டு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
செயல்களில் உத்வேகம் நிறைந்திருக்கும். மற்றவர்களை உற்சாகப்படுத்துவீர்கள். ஆதாயம் மிக்க நாள். மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
புதன் கிரகத்தின் சாதகமான பார்வையால், பிரியமானவர்களுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். இளைய சகோதரர்களுக்கு உதவுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பிரியமானவர்களின் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். நீண்டநாள் கனவு ஒன்று நிறைவேறும் தருணம் வந்துள்ளது. பிரயாணத்திற்கு தயாராவீர்கள். உற்சாகமான நாள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil