Advertisment

Rasi Palan 21th October 2020: இன்றைய ராசிபலன்

உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
Rasi Palan Today , இன்றைய ராசிபலன்

Rasi Palan Today , இன்றைய ராசிபலன்

Rasi Palan 21th October 2020: இன்றைய ராசிபலன்:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 21th October 2020: இன்றைய ராசி பலன், அக்டோபர் 20, 2020: 

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : சமூகத்தின் மீதுள்ள அக்கறை காரணமாக மன நிம்மதி பெறுவீர்கள். ஆனால், உங்கள் சொந்த காரியங்களில் இருந்து பின்வாங்குவதில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21): கலையின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பணி அழுத்தங்கள் குறையத் தொடங்கும். சில உதவிகளுக்கு கைம்மாறு செய்வதற்கும், அத்தியாவசியமற்ற மகிழ்ச்சித் தரக்கூடிய செயல்களை  செய்ய  வாய்ப்புகள் இருக்கும். குடும்ப உறுப்பினர் ஒருவர்  உங்களைப் புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்க உள்ளார். இதை விட உங்களின் தேவை என்ன?

மிதுனம் (மே 22 – ஜூன் 21): உங்கள் வாழ்க்கையில் நிகழும் பல தனிப்பட்ட மோதல்களுக்கு இணக்கமான தீர்வை  உருவாக்கும் வாய்ப்பை பெறுகிறீர்கள். அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் தீர்வு  ஏற்படும். மகிழ்ச்சியை நிலைநாட்டுவீர்கள்.

கடகம் (ஜூன் 22  – ஜூலை  23) : பொருளாதார சூழலை காரணம் காட்டி உங்களின்  உணர்ச்சி நிலைத்தன்மையை இழந்து விடாதீர்கள். இவை இரண்டும் தனித்தனியாக இயங்கக் கூடியவை. மகிழ்ச்சிக்கான செயல் திட்டத்தை உருவாக்குவது பெரும்பாலும் கடினம் என்றாலும், அதில் தாங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். அனுபவம் வாய்ந்த நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :  தியாகத்தை வெளிப்படுத்தும் மனநிலை உங்களிடம் காணப்படுகிறது.  தொண்டு நிறுவனம் ஒன்றில் உங்களை இணைத்துக் கொள்ள தயாராகி விட்டீர்கள். மாற்றங்களை இன்றிலிருந்து காண இருக்கின்றீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24  – செப்டம்பர் 23) : வழக்கமான பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அனைத்திற்கும் போராடுங்கள். எதற்கும், மனம் தளர வேண்டாம். இன்று உங்களின் போராட்டம், வரும் காலங்களில் அதிக நன்மை பயக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : உங்கள் மனதில் சில தயக்கங்கள்/ போராட்டங்கள் இருக்கலாம். ஆனால் அதை பெரிது படுத்த வேண்டாம். வெளி உலக அழகை  ரசிக்க பல வாய்ப்புகள் கிட்டும். தப்பித்துக் கொள்ளும் பழக்கத்தில் தவறில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்! நீங்கள் நின்று போராடுவீர்கள் என்று மற்றவர்கள் கூறும் கருத்து தவறாகக் கூட இருக்கலாம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22):  குடும்ப விவகாரங்களில் மேலும் சில கவனம் தேவைப்படுகிறது. உணர்ச்சிவசப்படுவதினால் எதையும் சாதிக்கமுடியாது. புத்தியைத் தீட்டுவது நல்லது.  உங்களை நாடி வருவோருக்கு உதவி செய்ய தயங்காதீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20):  நீங்கள் ஒரு போராளி. உங்கள் வாழ்க்கை சிறப்பானது. இதை, உங்கள்  விமர்சகர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அதுதான் உண்மை. நீங்கள், இன்னும் பார்க்க வேண்டிய நிகழ்வுகள் ஏராளம். எதிலும், எளிதில் சோர்ந்து விட வேண்டாம் . உங்களுக்கு உதவுவதில் யாருக்கும் தயக்கமில்லை.  ஆனால், முதல் நகர்வை நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். பாடல் வரியோடு சொல்ல வேண்டுமெனில், " பூங்கொடி தான் பூத்ததம்மா,  பொன்வண்டு தான் பார்த்ததம்மா, பாட்டெடுக்க தாமதிக்க

வாடைக் காற்று பூப்பறித்து.... போனதம்மா"

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :  கால நேரங்களுக்கு அப்பாற்ப்பட்ட நெறிமுறைகள் மற்றும்  மத உண்மைகளுக்கு ஏற்பவாழ்க்கையை நிர்வகிக்க முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்கான நேரமிது. தார்மீக மதிப்பை பின்பற்றுங்கள். ஆனால், பிறரிடம் உங்கள் நம்பிக்கையைத் திணிக்க வேண்டாம். கூடுதல் சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :  முதலீடு மற்றும் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உண்டாகும். நீங்கள் உங்கள் வாழ்கையை சுலபமாக்க முன்வர வேண்டும்.  சமநிலையை உருவாக்கி வாழ்க்கையை சரியான திசையில் எடுத்துச் செல்ல வேண்டிய நேரமிது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :  வாழ்க்கை எளிதானது என்று எடுத்துக் கொண்டாலும், அதில் காணப்படும்  அர்த்தங்கள் அளவிடமுடியாதது. உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையேயான எல்லைக் கோடை சரியான முறையில் வரையறுப்பது சிறந்ததாக இருக்கும்.

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment