Advertisment

Rasi Palan 22nd August: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 22nd August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 22nd August: இன்றைய ராசிபலன்

Rasi Palan 22nd August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 22nd August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 22nd August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 22, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மற்றர்வர்களை உங்களைச் சுற்றி எப்போதும் இருக்க அனுமதிக்காதீர்கள். உங்களுக்கே அது தொந்தரவாக அமையும். புகார்களை நீங்கள் உங்களுக்குள்ளேயே வைத்திருக்கப் போகிறீர்களா அல்லது வெளிக் கொணர போகிறீர்களா என்பதை உலகம் உற்று நோக்குகிறது. கவனம் தேவை.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களது குறிக்கோள் நிச்சயம் ஒருநாள் நிறைவேறும், கனவாகிப் போகாது. உங்களது கடினமான காலங்கள் உங்களை இரும்பு போல் வலிமையாக்கும். இன்றைய சோதனை, நாளைய சாதனை என்று சுருக்கமாக உங்கள் நிலையை விளக்கி விடலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிடிவாதம் உங்களின் மைன்ஸ் என்றாலும், அதனால் சில பாஸிட்டிவ் விஷயங்களும் அரங்கேறும். அதற்காக அதையே காரணம் காட்ட வேண்டாம். துணையிடம் காதலை வெளிப்படுத்துவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தெளிவான சிந்தனைகள் உண்டாகும். கடவுள் பக்தி அதிகரித்து, ஆன்மீகத்திற்கு நேரம் செலவு செய்வீர்கள். உங்களின் அனைத்து செயல்களுக்கும் நல்ல ரிசல்ட் கிடைக்கும். சந்திராஷ்டமம் சமீபத்தில் தான் உங்களுக்கு முடிந்திருக்கிறது. இனி, உங்கள் வழக்கமான கலகல பேச்சுகளை தொடரலாம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சூரியனின் ஆதிக்கம் இருப்பதால் நீங்கள் எடுத்த செயல் வெற்றிப் பெறும். குறைந்தபட்சம் தோல்வியில் இருந்து தப்பிக்கும். உங்களின் செயல்பாட்டை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். முடிவுகளை உடனுக்குடனும் சரியாகவும் எடுப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வாய்ப்புகள் பல உருவாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிட்டும். நவம்பர் மாதத்திற்குள் வெளிநாடு பயணம் செய்வீர்கள். உங்களது தனிப்பட்ட முடிவுகள் பெரும்பாலும் ஆதாயம் தேடி தரும். வருமானம் அதிகரிக்கும். நிம்மதியான சூழல் குடும்பத்தில் நிலவும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

தனிமையான சூழலை தவிர்க்கப் பழகுங்கள். தவறான சிந்தனைகள் உங்கள் வளர்ச்சியை மட்டுப்படுத்தும். தேவையான இடங்களில் கோபத்தை வெளிப்படுத்துவது தான் புத்திசாலித் தனம். உங்களுக்கான இன்றைய நாள் ஆதாயம் நிறைந்து காணப்பட்டாலும், ஏமாற்றங்களும் பங்கேற்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நாளுக்கு நாள் தீவிரமான நெகட்டிவ் வைப்ஸ் இன்று குறையும். கவலை வேண்டாம். உங்களுக்கான நாள் இன்று. புதிய முயற்சிகளை இன்று கையிலெடுங்கள். வெற்றி கிட்டும். தவறான முன்னுதாரங்களை என்றும் கொடுத்துவிட வேண்டாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

வெற்றியும், தோல்வியும் மாறி மாறி உங்கள் வாழ்க்கையில் விளையாடும். ஏமாற்றம் இருந்தாலும், நொடித்துப் போகும் அளவுக்கு எந்த சூழலும் ஏற்படாது. உங்கள் கருத்துகளை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. அது போலத் தான் நீங்களும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

முருகனின் வழிபாட்டுடன் இன்றைய தினத்தை தொடங்குங்கள். வருகின்ற ஆபத்து நீங்கும். தேர்வுகளுக்கு படிக்கும் போது மிகுந்த கவனம் தேவை. மாணவர்களை பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பங்களுடன் அதிகம் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிட்டும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மனதில் வைத்திருந்த அழுத்தங்களை வெளியே கொட்டுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கான நாளாக அமையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment