Rasi Palan Today 22nd December 2018 in Tamil : இந்த உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் இயற்கையின் சக்திக்கு உட்பட்டதே. அதில் மனித இனமே அதிகளவில் ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. வானிலை சாஸ்திரம், ஜோதிடம், ஜாதகம் என்று அவன் கண்டுபிடித்த ஆச்சர்யங்கள் அதில் ஒன்று. நமது தமிழ்.இந்தியன்எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம், நீங்கள் உங்கள் தின பலனை தெரிந்து கொள்ளலாம். இன்று உங்களுக்கான ராசிபலன் இதோ,
Rasi Palan 22nd November 2018 : இன்றைய ராசி பலன், 22 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
குடும்பத்தில் நிச்சயத்தன்மையற்ற சூழல் நிலவும். பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் முடியாமல், மனைவியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும் முடியாமல் தடுமாறுவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள். ஆனால், முடிவு உங்களுடையதாக இருக்கட்டும். நண்பர்களை கூட சற்று தள்ளியே வையுங்கள். பிரச்சனைகளை கண்டு அஞ்ச வேண்டாம். எதிர்த்து நில்லுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உடல்நலத்தில் சற்று அக்கறை தேவை. வயிறு தொடர்பான உடல் உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்களின் நம்பிக்கை சிதையாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. உங்களால் முடியும் என நீங்கள் நம்பினால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. பணியிடத்தில் சிறந்து விளங்குவீர்கள்
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
முயற்சி இருந்தால் உங்களது நோக்கம் நிறைவேறும். ஆனால், அந்த முயற்சியை முன்னெடுப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. வெற்றி, தோல்வி என மாறி மாறி பயணிப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மகிழ்ச்சியான நாள். இல்லறம் இனிக்கும். மேலதிகாரிகளின் பரிவு கிடைக்கும். தொற்று சம்பந்தமான உபாதைகள் நீங்கும். செலவினம் குறையும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
தித்திப்பான நாள் இன்று. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றிப் பெறும். அவற்றின் மூலம் லாபகரமான பலன் கிடைக்கும். மிகவும் தன்னம்பிக்கையுடன் உணருவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
சற்று நிதானமாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களது பதட்டம் தோல்வியில் முடியலாம். நிதிநிலைமை அபாரமாக இருக்கும். இது உங்களுக்கு அதிருப்தி அளிக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கடவுள் வழிபாடும் அவசியம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தவறுக்காக மனம் வருந்துவீர்கள். பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். அதிக கவனம் தேவை.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். மேம்போக்கான சிந்தனைகளை மாற்றிக் கொண்டால் உங்களுக்கு நல்லது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
அனுபவமே உங்களுக்கு பாடம். அதை நியாயமாக கற்றுக் கொள்ள விரும்புவீர்கள். சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் ரியாக்ட் செய்ய வேண்டாம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
உங்கள் முயற்சிகள் வெற்றியில் முடியும். தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று முன்னேற்றமான நாள்.